×

காட்டாற்று வெள்ளத்தில் உளுந்து மரவள்ளிக்கிழங்கு பயிர்கள் சேதம்

ஜெயங்கொண்டம், டிச.8: அரியலூர் மாவட்டம் ஆண்டிமடம் அருகே அழகாபுரம் கிராமத்தில் பெரிய ஏரி ஒன்று உள்ளது. புரெவி புயல் காரணமாக கனமழை பெய்து வருவதால். குளங்களிலும் நீர் நிரம்பி பெரிய ஏரியில் கலக்கிறது. வயல்வெளிகளில் காட்டாறு போல் மழைநீர் செல்கிறது. இந்த வெள்ள நீரானது அழகாபுரம், ஓலையூர் கிராமங்களில் உள்ள விவசாய நிலங்களில் விவசாயம் செய்யப்பட்டுள்ள நெற்பயிர்கள், மரவள்ளிக்கிழங்குகள், உளுந்து உள்ளிட்டவைகளை நீரில் மூழ்கடித்து செய்துள்ளது. இதனால் அப்பகுதியில் சுமார் 200 ஏக்கர் நிலபரப்பில் பயிரிடப்பட்டிருந்த மரவள்ளிக்கிழங்கு, உளுந்து, கரும்பு, முந்திரி, ஆகிய பயிர்களை நாசம் செய்தது.

இதனால் இன்னும் சில மாதங்களில் அறுவடை செய்யும் நிலையில் உள்ள மரவள்ளிக்கிழங்கு அழுகி நாசமாகும் சூழ்நிலை உள்ளது. இதுகுறித்து விவசாயிகள் மழைக்காலங்களில் மழைநீர் பெரியஏரியில் நிறம்பிய மழைநீர் வடிகால் வாய்க்கால் அமைக்கப்பட்டு விவசாய நிலங்களில் வராமல் அழகாபுரம் ஓலையூர் தார் சாலை வழியாக மாற்றுப்பாதையில் செல்ல வழிவகை செய்யுமாறு கோரிக்கை விடுத்துள்ளனர். இதுகுறித்து அரியலூர் மாவட்ட கலெக்டரை பலமுறை சந்தித்து விவசாயிகள் மனு கொடுத்துள்ளனர். தற்போது பெய்து வரும் மழையால் விவசாயிகள் பெரிதும் நம்பியிருந்த சாகுபடி செய்த பயிர்கள் அழுகி நாசம் அடைவதைக் கண்டு விவசாயிகள் மிகவும் வேதனையில் உள்ளனர்.

எனவே மாவட்ட நிர்வாகம் தகுந்த நடவடிக்கை எடுத்து விவசாயின் வாழ்வாதாரத்தை காப்பாற்ற வேண்டும்.தற்பொழுது மழை வெள்ளத்தால் மூழ்கியுள்ள பயிர்களுக்கு உரிய இழப்பீடு வழங்க வேண்டும் என்பது விவசாயிகளின் கோரிக்கையாக உள்ளது. மேலும் இந்த வெள்ள சேதம் குறித்து ஆய்வு செய்ய மாவட்ட வேளாண் இணை இயக்குனர் பழனிச்சாமி, ஆண்டிமடம் வட்டார வேளாண்மை உதவி இயக்குனர் ராஜலட்சுமி, ஆண்டிமடம் வட்டார வளர்ச்சி அலுவலர் அமிர்தலிங்கம், தோட்டக்கலை அலுவலர்கள் ஆகியோர் விவசாய நிலங்களை ஆய்வுசெய்து சென்றனர்.

Tags : floods ,
× RELATED ஆப்கனில் கடும் வெள்ளம்: 33 பேர் பலி