×

அணைக்கரை கீழணையில் இருந்து கடலுக்கு 10,000 கனஅடி நீர் திறப்பு வடகிழக்கு பருவமழை எதிரொலி தாழ்வான பகுதிகளில் மக்கள் தங்க வேண்டாம்

பாடாலூர், டிச 8: பெரம்பலூர் மாவட்டத்தில் வடகிழக்கு பருவமழையை முன்னிட்டு சிறுவாச்சூர், ஜமீன் பேரையூர் ஆகிய பகுதிகளில் மாவட்ட கலெக்டர் வெங்கடபிரியா நேரில் சென்று பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டார். வடகிழக்கு பருவமழையை முன்னிட்டு பெரம்பலூர் மாவட்டத்தில் சிறுவாச்சூர் பகுதிகள் மற்றும் ஜமீன் பேரையூர், கூடலூர் இடையே உள்ள மருதாற்றின் குறுக்கே உள்ள தரைபாலத்தில் மழையின் காரணமாக தரைபாலத்தின் மேல் தண்ணீர் செல்வதையும் மாவட்ட கலெக்டர் வெங்கடபிரியா நேரில் சென்று பார்வையிட்டு தரைபாலத்தில் மக்கள் செல்லாத வண்ணம் கண்காணிக்க அலுவலரை நியமித்து தொடர்ந்து கண்கானித்திட உத்தரவிட்டார்.

இதுகுறித்து மாவட்ட கலெக்டர் மேலும் தெரிவித்துள்ளதாவது: தமிழக அரசின் உத்தரவின்படி, வடகிழக்கு பருவமழையை எதிர்கொள்வதற்காக பெரம்பலூர் மாவட்டத்தில் வருவாய் மற்றும் பேரிடர் மேலாண்மை துறையின் மூலம் போர்கால அடிப்படையில் முன்னேற்பாடு பணிகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன. வடகிழக்கு பருவமழை காலத்தில் பேரிடர் ஏதேனும் ஏற்படும் பட்சத்தில், பாதிப்பு ஏற்படக்கூடிய பகுதிகளில் உள்ள மக்களை மீட்டு பாதுகாப்பாக தங்க வைத்திட ஏதுவாக மாவட்டத்தின் அனைத்துப் பகுதியிலும் உள்ள சமுதாய கூடங்கள், பள்ளி கட்டிடங்கள் மற்றும் திருமண மண்டபங்கள் என பொதுமக்கள் தங்குதற்கு தேவையான வசதிகள் கொண்ட கட்டிடங்கள் தேர்வு செய்யப்பட்டு தயார் நிலையில் வைக்கப்பட்டுள்ளது. தொடர்ந்து மழை பெய்து வருவதாலும் ஏரி, குளங்கள் விரைவாக நிரம்பி வருவதாலும் உபரி நீர் வெளியேறி ஓடை, ஆற்றுப்பகுதி போன்ற நீர்வழித்தடங்களில் திடீர் வெள்ளம் ஏற்பட வாய்ப்புள்ளது. காட்டாறுகளில் வெள்ளம் வருவதற்கு அதிக வாய்ப்புள்ளது.

மேலும், அதன் வேகத்தினை கணிக்க இயலாத காரணத்தால் பொதுமக்கள் மற்றும் குழந்தைகள் நீர்நிலைகளை பார்வையிடவோ அருகில் செல்லவோ வேண்டாம். பெற்றோர்கள் குழந்தைகளை கவனமாக கவனித்துக் கொள்ள வேண்டும். மரம் மற்றும் மின்கம்பங்கள் அருகில் செல்ல வேண்டாம். ஓட்டு வீடு, குடிசை வீடு, மற்றும் தாழ்வான பகுதிகளில் குடியிருப்பவர்கள் அருகில் உள்ள நிவாரண முகாம்களுக்கு சென்று பாதுகாப்பாக தங்கி கொள்ள வேண்டும்.
பொதுமக்கள் வடகிழக்கு பருவமழையினால் ஏற்படும் சேதங்கள் குறித்து 24 மணி நேரமும் புகார் அளிக்க மாவட்ட நிர்வாகத்தால் ஏற்படுத்தப்பட்டுள்ள 1077, 1800 425 4556, 8903024616 என்ற கட்டணமில்லா தொலைபேசி எண்ணை தொடர்பு கொண்டு மாவட்ட நிர்வாகத்திற்கு உடனே தகவல் தெரிவிக்கலாம். மேலும் பொதுமக்கள் அத்தியாவசிய தேவையின்றி வெளியில் வருவதை தவிர்த்து மாவட்ட நிர்வாகத்திற்கு ஒத்துழைப்பு வழங்கிட வேண்டும் என மாவட்ட கலெக்டர் வெங்கட பிரியா தெரிவித்தார்.

Tags : sea ,dam ,areas ,
× RELATED பாம்பன் கடலில் புதிய ரயில் பாலப்பணிகள் தீவிரம்