கரூர் ராமகிருஷ்ணபுரம் சந்திப்பு சாலையில் பாதாள சாக்கடையில் உடைப்பு குளம்போல் கழிவு நீர் தேக்கம்

கரூர், டிச. 8: கரூர் ராமகிருஷ்ணபுரம் சந்திப்பு சாலையில் பாதாள சாக்கடையில் உடைப்பு ஏற்பட்டு கழிவு நீர் வெளியேறி வருவதால் கடும் துர்நாற்றம் ஏற்படும் சூழல் உருவாகியுள்ளது. கரூர் நகரின் மையப்பகுதியில் ராமகிருஷ்ணபுரம் சந்திப்பு சாலை பகுதி உள்ளது. வடக்கு பிரதட்சணம், ரயில்வே மேம்பாலம், ராமகிருஷ்ணபுரம் போன்ற பகுதிகளுக்கான சாலை இந்த பகுதியில் இருந்து பிரிகிறது. இந்த பகுதியை ஒட்டி தனியார் மருத்துவமனை, டெக்ஸ்டைல்ஸ் நிறுவனங்கள், குடியிருப்புகள் உள்ளன. இந்நிலையில், கடந்த சில நாட்களாக பாதாள சாக்கடை உடைப்பு காரணமாக கழிவு நீர் வெளியேறி கடும் சுகாதார சீர்கேட்டை ஏற்படுத்தி வருகிறது. கழிவு நீர் வெளியேற்றம் சரி செய்யப்படாமல் பேரிகார்டு வைத்து மறைக்கப்பட்டுள்ளதால் போக்குவரத்து பாதிப்பும் ஏற்பட்டு வருகிறது.  கழிவு நீர் வெளியேறி சாலை முழுதும் பரவி வருவதால் சுற்றுச்சூழல் பாதிப்பும் ஏற்பட்டு வருகிறது. எனவே சம்பந்தப்பட்ட அதிகாரிகள் இதனை விரைந்து சரி செய்ய வேண்டும் என கோரிக்கை வைக்கப்பட்டுள்ளது. சம்பந்தப்பட்ட அதிகாரிகள், பணியாளர்கள் மூலம் இதனை விரைவாக சீரமைக்க தேவையான ஏற்பாடுகளை மேற்கொள்ள வேண்டும் என எதிர்பார்க்கப்படுகிறது.

Related Stories:

>