×

நிலையூர்-கம்பிக்குடி கால்வாய் திட்டத்திற்கு ரூ.10 கோடி நிதி ஒதுக்கீடு: அமைச்சர் தங்கம் தென்னரசு தகவல்

காரியாபட்டி, ஏப் 5: நிலையூர் கம்பிக்குடி கால்வாய் திட்டத்திற்கு ரூ.10 கோடி நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளதாக அமைச்சர் தங்கம் தென்னரசு தெரிவித்துள்ளார்.
காரியாபட்டி திமுக மேற்கு ஒன்றியம் சார்பில் தீவிர உறுப்பினர் சேர்க்கான உறுப்பினர் படிவம் வழங்கும் நிகழ்ச்சி நடைபெற்றது. இந்த நிகழ்ச்சிக்கு காரியாபட்டி மேற்கு ஒன்றிய திமுக செயலாளர் கண்ணன் தலைமை விகித்தார். மாவட்ட கவுன்சிலர் தங்கத்தமிழ்வாணன், யூனியன் துணைத் தலைவர் ராஜேந்திரன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். திமுக உறுப்பினர்கள் சேர்க்கும் படிவத்தை வழங்கி தொழில் துறை அமைச்சர் தங்கம் தென்னரசு பேசுகையில், இளைஞர்களுக்கும் மாணவ, மாணவிகளுக்கும் திமுகவின் கொள்கையையும், அரசின் சாதனைகளையும் எடுத்து கூறி உறுப்பினர்களாக சேர்க்க வேண்டும்.

மேலும் ஒவ்வொரு வாக்குச்சாவடிகளுக்கும் பூத் கமிட்டி அமைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும். தற்போது நடைபெற்று வரும் பட்ஜெட் கூட்டத்தொடரில் நீர்வளத் துறை சார்பில் நிலையூர் கம்பிக்குடி கால்வாய் நீட்டிப்புக்கு ரூ.10 கோடி நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. மேலும் சென்னம்பட்டி கால்வாய் திட்டத்திற்கும் நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. இதனால் இந்த பகுதி விவசாயிகள் பெரிதும் பயனடைவார்கள். இவ்வாறு அவர் பேசினார். இதில் மாநில இளைஞரணி துணை அமைப்பாளர் ராஜா, காரியாபட்டி கிழக்கு ஒன்றிய செயலாளர் செல்லம், காரியாபட்டி பேரூராட்சி சேர்மன் செந்தில், மாவட்ட பொருளாளர் வேலுச்சாமி, நரிக்குடி ஒன்றிய செயலாளர் கண்ணன்,திருச்சுழி ஒன்றிய செயலாளர் சந்தன பாண்டியன், பொதுக்குழு உறுப்பினர் சிவசக்தி, மாவட்ட நெசவாளர் அணி அமைப்பாளர் கடம்பாவனம், ஊராட்சி தலைவர் கணேசன், ஒன்றிய நெசவாளர் அணி அமைப்பாளர் முருகன், தொழிலாளர் அணி முருகன் மற்றும் பலர் கலந்து கொண்டனர்.

The post நிலையூர்-கம்பிக்குடி கால்வாய் திட்டத்திற்கு ரூ.10 கோடி நிதி ஒதுக்கீடு: அமைச்சர் தங்கம் தென்னரசு தகவல் appeared first on Dinakaran.

Tags : Minister Thangam ,Southern State ,Kariyapatti ,Minister ,Thangam ,Kambikudi ,
× RELATED தமிழ்நாடு மின் நுகர்வில் நேற்று புதிய உச்சம்: அமைச்சர் தங்கம் தென்னரசு