மதுரை, ஆக. 13: வருவாய் துறைன்று ஆண்டுகளுக்கு மேலாக காலியாக உள்ள 564 அலுவலக உதவியாளர் பணியிடங்களை நிரப்ப வேண்டும். அனைத்து மாவட்டங்களிலும் பேரிடர் மேலாண்மைப் பணிக்கென சிறப்பு பணியிடங்கள் மற்றும் பேரிடர் மேலாண்மைப்பிரிவில் 2023 முதல் கலைக்கப்பட்ட 97 பணியிடங்களை மீண்டும் வழங்கிட வேண்டும் என்பது உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி தமிழ்நாடு வருவாய் துறை அலுவலர்கள் சங்கத்தின் சார்பில் நேற்று மாலை ஆர்ப்பாட்டம் நடந்தது.
மதுரை கலெக்டர் அலுவலகத்தில் நடந்த ஆர்ப்பாட்டத்திற்கு சங்கத்தின் மாவட்ட தலைவர் கோபி தலைமை வகித்தார். மத்திய செயற்குழு உறுப்பினர் செந்தில் வள்ளி விளக்க உரையாற்றினார். மாவட்ட இணை செயலாளர் இலக்கியா நன்றி கூறினார். மாவட்ட நிர்வாகிகள் முத்துப்பாண்டி, மணிமேகலை, முருகானந்தம் மற்றும் வருவாய் துறையினர் ஏராளமானோர் கலந்து கொண்டனர். இதேபோல், மேலூர் வாடிப்பட்டி, உசிலம்பட்டி, பேரையூர், கள்ளிக்குடி மற்றும் திருமங்கலம் தாலுகா அலுவலகங்கள் முன்பும் ஆர்ப்பாட்டம் நடந்தது.
