×

திருத்துறைப்பூண்டியில் ராதா கல்யாண வைபோகம்

திருத்துறைப்பூண்டி, ஆக. 13: திருவாரூர் மாவட்டம், திருத்துறைப்பூண்டியில் இரண்டு நாட்கள் ராதாகல்யாணம் பஜனை சம்பிரதாயப்படி நடைபெற்றது. முதல் நாள் காலை அஷ்டபதி ஆரம்பித்து மாலை ராமர் கோயிலிருந்து சுவாமி மாப்பிள்ளை அழைப்பு ஊர்வலம் புறப்பட்டது. ராதாகிருஷ்ணன் சுவாமி அலங்கரிக்கப்பட்டு நகரின் முக்கிய வீதிகள் வழியாக நாம சங்கீர்த்தனம் செய்து கொண்டு பக்தர்கள் திருமண மண்டபம் வந்தடைந்தனர். மறுநாள் காலை உஞ்சவிருத்தி, மாலை மாற்றுதல், ஊஞ்சல் வைபவம், மதியம் ராதாகல்யாண திருமாங்கல்யதாரணம் நடைபெற்றது.

தெய்வீக வேடம் நிகழ்ச்சிக்கு பின் ஆஞ்சநேயர் உத்ஸவத்துடன் நிறைவுற்றது. இவ்வைபவத்தில் கோவிந்தபுரம் விட்டல் ருக்மிணி ஸம்ஸ்தான் விட்டலதாஸர் மஹராஜ் அவர்கள் கலந்து கொண்டு பக்தர்களுக்கு ஆசி வழங்கினார். இதன் ஏற்பாடுகளை திருத்துறைப்பூண்டி பாண்டுரங்க பஜன் மண்டலி சார்பில் துளசிதாஸ் செய்திருந்தார். இத்திருக்கல்யாண வைபவத்தில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சிறப்பித்தனர்.

 

Tags : Radha Kalyana Vaibogam ,Thiruthuraipoondi ,Radha Kalyanam Bhajans ,Thiruthuraipoondi, Tiruvarur district ,Ashtapati ,Swami ,Mapillai ,Ram temple ,Radha Krishnan ,
× RELATED ஓய்வூதியர் தின விழா