×

மக்கள் குறைதீர் கூட்டம் 387 மனுக்கள் வருகை

தஞ்சாவூர், ஆக. 13: தஞ்சாவூர் மாவட்டத்தில் மக்கள் குறை தீர் கூட்டம் நேற்று நடந்தது. மாவட்ட வருவாய் அலுவலர் தியாகராஜன் தலைமை வகித்தார். இதில் இலவச பட்டா, முதியோர் வீட்டுமனைப் உதவித்தொகை, குடும்ப அட்டை, பட்டா மாற்றம், கல்விக்கடன் உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகள் அடங்கிய 387 மனுக்கள்பெறப்பட்டன.

இம்மனுக்கள் மீது உரிய நடவடிக்கைகள் உடனடியாக மேற்கொள்ளுமாறு சம்பந்தப்பட்ட அலுவலர்களுக்கு மாவட்ட வருவாய் அலுவலர் தியாகராஜன் உத்தரவிட்டார்கள். இதில் ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் நல அலுவலர் ரவிச்சந்திரன், பிற்படுத்தப்பட்டோர் நல அலுவலர் ஸ்ரீதர் மற்றும் அனைத்துத் துறை அலுவலர்கள் கலந்து கொண்டனர்

 

Tags : People's Grievance Redressal Meeting ,Thanjavur ,District Revenue Officer ,Thiagarajan ,
× RELATED ஓய்வூதியர் தின விழா