பாடாலூர், ஆக. 13: ஆலத்தூர் தாலுகாவில் தாயுமானவர் திட்டம் மூலம் முதியவர்கள் மற்றும் மாற்றுத்திறனாளிகளின் வீடுகளுக்கு சென்று நேரில் சென்று அரிசி, சர்க்கரை உள்ளிட்ட ரேஷன் பொருட்கள் வழங்கப்பட்டது. சென்னையில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் நேற்று ரேஷன் பொருட்களை வீடு தேடி வினியோகம் செய்யும் தாயுமானவர் திட்டத்தை தொடங்கி வைத்தார்.
அதன்படி பெரம்பலூர் மாவட்டம் ஆலத்தூர் தாலுகாவில் கூட்டுறவு சங்கங்களில் கீழ் செயல்படும் ரேஷன் கடைகளில் தாயுமானவர் திட்டத்தை கீழ் முதியவர் மற்றும் மாற்றுத்திறனாளிகளின் வீடுகளுக்கு சென்று நேரில் சென்று அரிசி, சர்க்கரை, கோதுமை, ஜூனி உள்ளிட்ட ரேஷன் பொருட்களை நேற்று விற்பனையாளர்கள் முலம் வழங்கப்பட்டது. ஒவ்வொரு மாதமும் 2-வது சனி மற்றும் ஞாயிற்றுக்கிழமைகளில் இந்த திட்டம் செயல்படுத்தப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
