×

குன்றக்குடி கோயிலில் பங்குனி உத்திர விழா: பக்தர்கள் பால்குடம், பறவை காவடி எடுத்து நேர்த்திகடன்

காரைக்குடி, ஏப். 5: காரைக்குடி அருகே குன்றக்குடியில் சண்முகநாதப் பெருமான் கோயில் பங்குனி உத்திர திருவிழாவை முன்னிட்டு, ஏராளமான பக்தர்கள் பால்குடம், பறவை காவடி எடுத்து நேர்த்திக்கடன் செலுத்தினர். குன்றக்குடி அருள்தரு சண்முகநாதப் பெருமான் கோவில் பங்குனி உத்திரப் பெருந்திருவிழா கடந்த மாதம் 25ம் தேதி விக்னேசுவர பூசை, வாஸ்து சாந்தியுடன் துவங்கியது. தொடர்ந்து 26ம் தேதி கொடியேற்றம் நடந்தது. விழாவை முன்னிட்டு ஒவ்வொரு நாளும் வெள்ளிகேடகம், ருத்ராட்சக் கேடகம் உள்பட பல்வேறு வாகனங்களில் சுவாமி திருவீதி உலா நடந்தது. 30ம் தேதி வள்ளிநாயகி திருமணம். ஏப்ரல் 1ம் தேதி தங்க ரதம். 2ம் தேதி இரவு 8 மணிக்கு வையாபுரியில் தெப்பம், வெள்ளி ரதம். 3ம் தேதி தேரோட்டம், இரவு திருவீதி உலா நடந்தது. தொடர்ந்து பங்குனி உத்திரப் பெருநாளான நேந்று பகல் 11.15 மணிக்கு உத்திரம் தீர்த்தவிழா, இரவு 8 மணிக்கு மயிலாடும் பாறைக்கு சுவாமி எழுந்தருளல் நடந்தது. விழாவை முன்னிட்டு பக்தர்கள் பால்குடம், பறவை காவடி எடுத்துக் நேர்த்திக்கடனை செலுத்தினர். விழா ஏற்பாடுகளை திருக்கோவில் பரம்பரை அறங்காவலர் தவத்திரு குன்றக்குடி பொன்னம்பல அடிகளார் தலைமையில் கோயில் நிர்வாகிகள் செய்திருந்தனர்.

The post குன்றக்குடி கோயிலில் பங்குனி உத்திர விழா: பக்தர்கள் பால்குடம், பறவை காவடி எடுத்து நேர்த்திகடன் appeared first on Dinakaran.

Tags : Panguni Utra Festival ,Kunrakkudi Temple ,Karaikudi ,Panguni Uthra Festival ,Lord Shanmuganath temple ,Kunrakkudi ,
× RELATED காரைக்குடி-திண்டுக்கல் இடையே புதிய...