வேதாரண்யம், ஆக.13: எல்லோருக்கும் எல்லாம் என்ற சீரிய திட்டமான முதியோர்கள் மற்றும் மாற்றுத் திறனாளிகளின் இல்லங்களுக்கே சென்று ரேஷன் பொருட்களை வழங்கும் தாயுமானவர் திட்டத்தினை தமிழ்நாடு முதலமைச்சர் ஸ்டாலின் நேற்று சென்னையில் தொடங்கி வைத்தார்.
இதனையடுத்து வேதாரண்யம் மேற்கு ஒன்றியம் வாய்மேடு, தகட்டூர் ஊராட்சியில் வேதாரண்யம் மேற்கு ஒன்றிய செயலாளர் உதயமுருகையன் பயனாளிகளுக்கு ரேஷன் பொருட்களை வீடு தேடி சென்று வழங்கி திட்டத்தை துவக்கி வைத்தார். நிகழ்ச்சியில் திமுக பொதுக்குழு உறுப்பினர்கள், பழனியப்பன், வீரமணிகண்டன், முன்னாள் ஒன்றிய குழு உறுப்பினர் செல்லமுத்து, எழிலரசன், திமுக நிர்வாகிகள், சுப்பையன், தட்சணாமூர்த்தி உள்ளிட்ட திமுக கிளை, கழக நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.
