×

திருத்தங்கல் நகராட்சியில் புதிய கட்டிடங்கள் கட்ட பூமிபூஜை அமைச்சர் ராஜேந்திரபாலாஜி துவக்கி வைத்தார்

சிவகாசி, டிச. 8: சிவகாசி சட்டமன்ற உறுப்பினர் மேம்பாட்டு நிதியின் கீழ் திருத்தங்கல் நகராட்சி வார்டு 20ல் ரூ.10 லட்சம் மதிப்பீட்டில் மழைநீர் வடிகால் அமைக்கும் பணி, வார்டு 10ல் ரூ.7 லட்சம் மதிப்பீட்டில் 10ஆயிரம் லிட்டர் கொள்ளளவு கொண்ட மேல்நிலை நீர்த்தேக்க தொட்டி கட்ட பணி, வார்டு 6ல் ரூ.10 லட்சம் மதிப்பீட்டில் கங்கன் காலனியில் புதிய அங்கன்வாடி கட்டடம் கட்ட பணி, சத்யா நகர் அரசு உயர்நிலைப்பள்ளியில் ரூ.68.02 லட்சம் மதிப்பீட்டில் அறிவியல் ஆய்வகம், கலை மற்றும் கைவினை அறை, நூலக அறை, கணினி அறை உள்ளிட்ட கட்டடங்கள் கட்டுவதற்கும் பூமிபூஜை நடைபெற்றது. புதிய கட்டடம் கட்டுவதற்கான பணிகளை அமைச்சர் ராஜேந்திரபாலாஜி பூமிபூஜை போட்டு துவக்கி வைத்தார்.
 திருத்தங்கல் நகராட்சி ஆணையாளர் பாண்டித்தாய், பொதுப்பணித்துறை செயற்பொறியாளர் கணேசன், மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் சுபாஷினி, அதிமுக நகர செயலாளர் பொன்சக்திவேல், ஒன்றிய செயலாளர்கள் புதுப்பட்டி கருப்பசாமி, பலராம், சுப்பிரமணியன், ஒன்றிய கவுன்சிலர் ஆழ்வார்ராமானுஜம், மதுரை மண்டல தகவல் தொழில்நுட்ப துணை செயலாளர் கருப்பசாமி பாண்டியன், மருத்துவ அணி மாவட்ட செயலாளர் விஜய்ஆனந்த், சிறுபான்மை பிரிவு மாவட்ட செயலாளர் செய்யது சுல்தான், தகவல் தொழில்நுட்ப பிரிவு செயலாளர் பாண்டியராஜன், ஆனையூர் ஊராட்சி மன்ற தலைவர் லட்சுமிநாராயணன், சங்கர்ஜி, கார்த்திக் கலந்து கொண்டனர்.

Tags : Rajendrapalaji ,buildings ,municipality ,Tirutangal ,
× RELATED உலக மலேரியா தினத்தையொட்டி தூய்மை பணியாளர்கள் உறுதிமொழி ஏற்பு