×

சேப்பாக்கம் – திருவல்லிக்கேணி சட்டமன்ற தொகுதியில் முதலமைச்சரின் தாயுமானவர் திட்டம் துணை முதல்வர் தொடங்கி வைத்தார்

சென்னை: சேப்பாக்கம் – திருவல்லிக்கேணி சட்டமன்ற தொகுதியில் முதலமைச்சரின் தாயுமானவர் திட்டத்தை துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின் தொடங்கி வைத்தார். சேப்பாக்கம் – திருவல்லிக்கேணி சட்டமன்ற தொகுதியில் செயல்பட்டு வரும் 36 நியாய விலைக் கடைகளுக்கு உட்பட்ட 70 வயதிற்கு மேற்பட்ட மூத்த குடிமக்கள் மற்றும் மாற்றுத் திறனாளிகளை கொண்ட 2,467 குடும்ப அட்டை வைத்திருக்கும் குடும்பங்களில் உள்ள 3,548 குடும்ப உறுப்பினர்களின் இல்லங்களிலேயே ரேஷன் பொருட்களை விநியோகம் செய்ய வழிவகை செய்யப்பட்டுள்ளது.

இந்நிகழ்ச்சியில் தேனாம்பேட்டை மண்டல குழு தலைவர் எஸ்.மதன்மோகன், மாநகராட்சி ஆளுங்கட்சி துணைத்தலைவர் ஏ.ஆர்.பி.எம்.காமராஜ், மாமன்ற உறுப்பினர் வே.கமலாசெழியன், சென்னை தெற்கு பொது விநியோக திட்ட இணை பதிவாளர் எஸ்.லட்சுமி உள்பட அரசு அலுவலர்கள் மற்றும் பொதுமக்கள் கலந்துகொண்டனர்.

Tags : Deputy ,Chief Minister ,Chepauk-Thiruvallikeni ,Assembly Constituency ,Chennai ,Deputy Chief Minister ,Udhayanidhi Stalin ,Chepauk- ,Thiruvallikeni Assembly Constituency ,
× RELATED அரசு பணிகளில் இட ஒதுக்கீடு...