×

.30 லட்சத்துக்கு மஞ்சள் ஏலம்

நாமகிரிப்பேட்டை, ஆக.13: நாமகிரிப்பேட்டை வேளாண் உற்பத்தியாளர்கள் கூட்டுறவு விற்பனை சங்கத்தில் வாரந்தோறும் செவ்வாய்க்கிழமை மஞ்சள் ஏலம் நடைபெற்று வருகிறது. நேற்று நடைபெற்ற ஏலத்திற்கு நாமகிரிப்பேட்டை, முள்ளுக்குறிச்சி, மெட்டாலா, மங்களபுரம், புதுப்பட்டி, சீராப்பள்ளி உள்ளிட்ட பகுதிகளில் இருந்து விவசாயிகள் மஞ்சளை விற்பனைக்கு கொண்டு வந்தனர். ஆத்தூர், சேலம், ஈரோடு, நாமக்கல் உள்ளிட்ட பகுதிகளில் இருந்து மஞ்சளை வாங்க வியாபாரிகள் வந்திருந்தனர். இதில் விரலி மஞ்சள் 312 மூட்டையும், உருண்டை மஞ்சள் 100 மூட்டையும், பனங்காளி மஞ்சள் 11 மூட்டைகள் என 423 மூட்டைகள் விற்பனைக்கு வந்தது. விரலி மஞ்சள் அதிகபட்சம் குவிண்டால் ரூ.13,999க்கும், குறைந்தபட்சம் ரூ.11,689க்கும், உருண்டை மஞ்சள் அதிகபட்சம் ரூ.12,369க்கும், குறைந்தபட்சம் ரூ.8,615க்கும், பனங்காளி மஞ்சள் அதிகபட்சம் ரூ.29,265க்கும், குறைந்தபட்சம் ரூ.8,402க்கும் என மொத்தம் 423 மூட்டைகள் ரூ.30 லட்சத்துக்கு விற்பனையானது.

Tags : Namakiripettai ,Namakiripettai Agricultural Producers Cooperative Sales Society ,Mullukkurichi ,Metalla ,Mangalapuram ,Pudupatti ,Seerapalli ,
× RELATED நைனாமலை அடிவாரம் ஆஞ்சநேயர் கோயிலில் ஜெயந்தி விழா