×

தனியார் துறை வேலைவாய்ப்பு முகாம்

நாமக்கல், ஆக.13: நாமக்கல் மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலகத்தில், தனியார் துறை வேலைவாய்ப்பு முகாம் நாளை நடைபெறுகிறது. இதுகுறித்து மாவட்ட கலெக்டர் துர்காமூர்த்தி வெளியிட்ட செய்திக் குறிப்பில் கூறியிருப்பதாவது: நாமக்கல் மாவட்ட வேலைவாய்ப்பு அலுவகத்தில் நாளை(14ம்தேதி) காலை 10 மணி அளவில் தனியார் துறை நிறுவனங்களும் – தனியார் துறையில் பணிபுரிய விருப்பம் உள்ள மனுதாரர்களும் நேரடியாக சந்திக்கும் தனியார் துறை வேலைவாய்ப்பு முகாம் நடைபெற உள்ளது. தனியார் நிறுவனங்கள் தங்களுக்குத் தேவையான நபர்களை, தங்களது நிர்வாகிகளைக் கொண்டோ அல்லது நேரில் வந்தோ தேர்வு செய்து கொள்ளலாம். இம்முகாமில் பங்குபெறும் வேலையளிப்போரும், வேலைநாடுநரும் எவ்வித கட்டணமும் செலுத்த தேவையில்லை. முகாமின் மூலம் பணி வாய்ப்பு பெற்றவரின் வேலைவாய்ப்பு அலுவலக பதிவு ரத்து செய்யப்படமாட்டாது. மேலும் விவரங்களுக்கு, 04286-222260 என்ற எண்ணை தொடர்பு கொள்ளலாம். இவ்வாறு கலெக்டர் தெரிவித்துள்ளார்.

Tags : Camp ,Namakkal ,District Employment Office ,District Collector ,Durkamoorthy ,
× RELATED நைனாமலை அடிவாரம் ஆஞ்சநேயர் கோயிலில் ஜெயந்தி விழா