கீழக்கரை, டிச. 8: திருப்புல்லாணி அருகே கொதக்கோட்டை உத்தரவை கிராமத்தை சேர்ந்தவர் கருப்பையா (28). இவர் நேற்று டூவீலரில் கீழக்கரை அருகே மதுரை சாலையில் சென்ற போது திடீரென ஆடு குறுக்கே வந்தது. இதனால் நிலைதடுமாறி ஆட்டின் மீது மோதி கீழே விழுந்தார். இதில் படுகாயமடைந்த அவரை மீட்டு கீழக்கரை ஜிஹெச்சிற்கு அனுப்பி வைத்தனர். ஆனால் வழியிலே கருப்பையா உயிரிழந்தார். கீழக்கரை போலீசார் வழக்குப்பதிந்து விசாரிக்கின்றனர்.