தேவேந்திர குல வேளாளர் பட்டியலில் இணைக்க எதிர்ப்பு கலெக்டரிடம் மனு

ராமநாதபுரம், டிச. 8: ராமநாதபுரம் கலெக்டர் அலுவலகத்தில் தமிழ்நாடு பட்டங்கட்டி கடையர் பேரவையை சேர்ந்த 200க்கும் மேற்பட்டோர் நேற்று கண்டன ஆர்ப்பாட்டம் நடத்தினர். ஆர்ப்பாட்டத்தில் தேவேந்திர குல வேளாளராக இணைக்கும் 7 உட்பிரிவுகளில் கடையினர் சாதியினர் இல்லை. நாங்கள் கடல் சார்ந்த தொழில்களை செய்து வருகிறோம். கடல்சார்ந்த பழங்குடியினர் என்கிற எஸ்டி பிரிவில் இணைக்க சொல்லி கேட்டு கொண்டிருக்கும் நிலையில் முதல்வரின் பழனிச்சாமியின் இந்த அறிவிப்பை வன்மையாக கண்டிக்கிறோம். எனவே தேவேந்திர குல வேளாளர் பட்டியலில் இணைக்க வேண்டாம் என மத்திய அரசுக்கு பரிந்துரை செய்து எங்களை நீக்கம் செய்ய வேண்டும்’ என கோரி கோஷமிட்டனர். தொடர்ந்து இதுதொடர்பான மனுவை கலெக்டரிடம் அளித்தனர்.

Related Stories:

>