×

முதுகுளத்தூர் பேரூராட்சியில் இயற்கை உரங்கள் விற்பனைக்கு தயார் விவசாயிகள் வாங்கி பயன்பெறலாம்

சாயல்குடி, டிச. 8: முதுகுளத்தூர் பேரூராட்சியில் 15 வார்டுகள் உள்ளன. காய்கறி, பழங்கள், மீன், இறைச்சி, உணவகங்கள், டீக்கடை என 100க்கும் மேற்பட்ட கடைகள் உள்ளன. இப்பகுதி வீடுகள், கடைகளில் பேரூராட்சி ஊழியர்களால் சேகரிக்கப்படும் குப்பைகள் மக்கும் குப்பைகள், மக்காத குப்பைகள் என தரம் பிரிக்கப்படுகிறது. உழவன்தோப்பு காலனியில் உள்ள பேரூராட்சிக்கு சொந்தமாக வளாகத்தில் இப்பணி நடக்கிறது. இதில் மக்கும் குப்பைகளை இயற்கை உரங்களாக தயாரித்து 1 கிலோ முதல் 5 கிலோ வரை பாக்கெட்களில் போடப்பட்டு விவசாயிகள், பொதுமக்கள் பயன்பாட்டிற்கு மலிவு விலையில் விற்கப்படுகிறது.

இதுகுறித்து செயல்அலுவலர் மாலதி கூறுகையில், ‘வீடுகள், கடைகளில் சேகரிக்கப்படும் குப்பைகள் தரம்பிரிக்கப்பட்டு இயற்கை முறையில் உரம் தயாரிக்கப்படுகிறது. தற்போது முதுகுளத்தூர் பகுதியில் தொடர் மழை பெய்து வருகிறது. இப்பகுதி விவசாயிகள் பயிரிட்டுள்ள நெல், மிளகாய் மற்றும் தோட்டப்பயிர்களுக்கு உரமிட வாங்கி பயன்படுத்தலாம். மேலும் வீட்டு தோட்டம், மாடி தோட்டம் வைத்திருப்போர் அடி உரம் இட வாங்கி பயன்படுத்தலாம். உழவன்தோப்பு காலனியில் உள்ள பேரூராட்சி பூங்கா, பேரூராட்சி அலுவலகத்தில் மலிவு விலையில் விற்கப்படுகிறது. விவசாயிகள், பொதுமக்கள் வாங்கி பயனடையலாம்’ என்றார்.

Tags : sale ,municipality ,Mudukulathur ,
× RELATED உலக மலேரியா தினத்தையொட்டி தூய்மை பணியாளர்கள் உறுதிமொழி ஏற்பு