×

பங்குனி உத்திரவிழாவை முன்னிட்டு வயலூர் முருகன் கோயிலுக்கு பால்குடம், பறவை காவடி எடுத்து பக்தர்கள் தரிசனம்

திருச்சி, ஏப். 5: பங்குனி உத்திர விழாவையொட்டி வயலூர் முருகன் கோயிலுக்கு பால்குடம், பறவை காவடி எடுத்து பக்தர்கள் தரிசனம் செய்தனர். திருச்சி அருகே உள்ள வயலூர் முருகன் கோயில் அருணகிரிநாதருக்கு காட்சி தந்து, திருப்புகழ் பாட அருளிய தலமாகும். திருமுருக கிருபானந்த வாரியார் தம் வாழ்நாள் எல்லாம் போற்றி வணங்கிய சிறப்பு வாய்ந்த தலமாகும். இக்கோயிலில் பங்குனி உத்திர திருவிழா 4ம் தேதி முதல் 8ம் தேதி வரை நடக்கிறது. பங்குனி உத்திரத்தை முன்னிட்டு நேற்று (4ம் தேதி) அதிகாலை 4 மணிக்கு கோயில் நடை திறக்கப்பட்டு சிறப்பு பூஜைகள் நடத்தப்பட்டது.

இதில், திருச்சி மாவட்டத்தை சேர்ந்த ஏராளமானோர் பால்காவடி எடுத்தும், அலகு குத்தியும் நேர்த்தி கடன் செலுத்தினர். மேலும், பறவை காவடி எடுத்து ஊர்வலமாக சென்று சாமி தரிசனம் செய்தனர். கடந்த பிப்ரவரி 12ம் தேதி கோயிலில் பாலாலயம் நடைபெற்றுள்ளதால் சாமி திருவீதி உலா கோயிலின் உள்ளேயே நடைபெற்றது. விழாவிற்கான ஏற்பாடுகளை இந்துசமய அறநிலையத்துறை இணை ஆணையர் செல்வராஜ் அறிவுரைப்படி உதவி ஆணையர் லட்சுமணன் மேற்பார்வையில் செய்திருந்தனர். பங்குனி உத்திரவிழாவையொட்டி பக்தர்களின் வசதிக்காக சிறப்பு பஸ்கள் போக்குவரத்துகழகம் சார்பில் இயக்கப்பட்டது.

The post பங்குனி உத்திரவிழாவை முன்னிட்டு வயலூர் முருகன் கோயிலுக்கு பால்குடம், பறவை காவடி எடுத்து பக்தர்கள் தரிசனம் appeared first on Dinakaran.

Tags : Panguni festival ,Vayalur Murugan Temple ,Trichy ,Panguni Uttra festival ,
× RELATED கொடைக்கானலில் 22 ஆண்டுக்குப் பிறகு...