திண்டுக்கல் மாவட்டத்தில் சட்டமன்ற தொகுதி தோறும் அரசு கல்லூரி திமுக துணைப்பொதுச்செயலாளர் ஐ.பெரியசாமி உறுதி

ஒட்டன்சத்திரம், டிச. 8:  ஒட்டன்சத்திரத்தில் ‘விடியலை நோக்கி ஸ்டாலினின் குரல்’ என்னும் நிகழ்ச்சி எம்.எல்.ஏ அர.சக்கரபாணி தலைமையில் நடந்தது. இதில் கலந்து கொண்ட திமுக மாநில துணைப்பொதுச் செயலாளர் ஐ.பெரியசாமி பேசியதாவது: தேர்தலில் வெற்றி பெற்று திமுக ஆட்சி அமைந்ததும், ஒட்டன்சத்திரம் குப்பையில்லா நகராட்சியாக மாற்றப்படும். இப்பகுதி விவசாயிகளின் கோரிக்கையான குளிர்பதன கிடங்கு அமைக்கப்படும், பாலாறு, நல்லதங்கால், அமராவதி, ஆழியாறு உள்ளிட்ட நதிகளை ஒருங்கிணைத்து, ஒட்டன்சத்திரம் நகர் வாழ் மக்களின் குடிநீர் பிரச்னை தீர்க்கப்படும். வணிகர்கள் கடந்த 10 ஆண்டிற்கும் மேலாக ஜிஎஸ்டி உள்ளிட்ட வரிகளால் வேதனைக்குள்ளாகி வருகின்றனர். 91 லட்சம் இளைஞர்கள் படித்துவிட்டு, வேலைக்காக பல வருடங்களாக காத்திருக்கின்றனர். திமுக ஆட்சி அமைந்தவுடன் ஒட்டன்சத்திரம் பகுதியில் தொழிற்சாலை அமைத்து, வேலையில்லா இளைஞர்கள் பணியமர்த்தப்படுவர். திமுக ஆட்சி மக்கள் நலன் காக்கும் ஆட்சியாக இருக்கும் என்று பேசினார்.    

இந்நிகழ்வில் திண்டுக்கல் நாடாளுமன்ற உறுப்பினர் வேலுச்சாமி, மாவட்ட துணைச் செயலாளர் ராஜாமணி, நகர செயலாளர் வெள்ளைச்சாமி, ஒன்றியச் செயலாளர்கள் ஜோதீஸ்வரன், தர்மராஜ், தங்கராஜ், ஒன்றிய தலைவர்கள் அய்யம்மாள், சத்தியபுவனா, தலைமை பொதுக்குழு உறுப்பினர்கள் கண்ணன், ஆறுமுகம், தமிழ்செல்விராஜா, வெங்கிடுசாமி, மாவட்ட இளைஞரணி அமைப்பாளர் ஹரிஹரசுதன், துணை அமைப்பாளர் பாண்டியராஜன் உள்ளிட்ட நிர்வாகிகள் உள்பட பலர் கலந்து கொண்டனர்.  

Related Stories:

>