×

உழவு பணியில் பிஸி

மூணாறு, ஆக. 12: கேரளா- தமிழ்நாடு எல்லைப் பகுதியில் அமைந்துள்ள வட்டவடையில் வருடத்தில் எல்லா மாதங்களிலும் காய்கறிகள் உற்பத்தி செய்யப்படுகின்றன. இங்கு வட்டவடை, பழதோட்டம், கோவிலூர் போன்ற பகுதிகளில் உற்பத்தி செய்யப்படும் காரட், பீன்ஸ், முட்டைகோஸ் மற்றும் உருளைக்கிழங்கு உட்பட உள்ள காய்கறிகள் கேரளா,தமிழ்நாடு உட்பட்ட பல பகுதிகளுக்கு ஏற்றுமதி செய்யப்படுகின்றன. தற்போது வட்டவடை மற்றும் சுற்றுப்புறப் பகுதிகளில் மழை பெய்து வரும் நிலையில் விவசாயிகள் புதிய பயிர் சாகுபடியில் ஈடுபட்டு வருகின்றனர். தட்டு தட்டாக உள்ள தங்களின் விவசாய நிலங்களில் காளை மாடுகளை பயன்படுத்தி ஏர்பூட்டி உழவு செய்வதையே பாரம்பரியமாக கடைபிடித்து வருகின்றனர்.

Tags : Munnar ,Vatavada ,Kerala-Tamil Nadu border ,Kovilur ,
× RELATED ஓய்வூதியர் தின விழா