×

ஆடுதுறை மதுரகாளியம்மன் கோயிலில் பவளகாளி திருநடன உற்சவம்

திருவிடைமருதூர், ஏப்.5: திருவிடைமருதூர் வட்டம் ஆடுதுறையில் புகழ்பெற்ற மதுர காளியம்மன் கோயில் 94ம் ஆண்டு திருநடன உற்சவம் கோலாகலமாக தொடங்கியது. ஆடுதுறையில் புகழ்பெற்றதும் இச்சோழவள நாட்டில் காவேரி நதிக்கு தென்பால் உள்ளதும், மூர்த்தி, தலம், தீர்த்தம் என மூன்றும் முறையாகக் கொண்டு சமயாச்சாரியார்களால் பாடல் பெற்ற தலங்களில் ஆபத்சகாயேஸ்வரர் ஆலயத்திற்கு தென்கிழக்கில் கோவில் கொண்டு எழுந்தருளியிருக்கும் புகழ்பெற்ற மதுர காளியம்மன் கோயில் 94ம் ஆண்டு திருநடன உற்சவம் கடந்த மார்ச் 27ஆம் தேதி காப்புகட்டுதல் வைபவத்துடன் தொடங்கியது.

தொடர்ந்து நேற்று விசேஷ பூஜைகளுடன் 30க்கும் மேற்பட்ட நாதஸ்வர கலைஞர்களின் மங்கல வாத்தியங்களுடன் அம்பாள் திருநடன உற்சவம் தொடங்கியது. தொடர்ந்து முக்கிய வீதிகளில் திருநடன ஊர்வலம் நடந்தது. இதில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டனர். வரும் 8ம் தேதி வரை ஆடுதுறையின் அனைத்து வீதிகளிலும் திருநடன நிகழ்ச்சிகள் நடக்கிறது. வரும் 14ம் தேதி அம்பாள் ஊஞ்சல் உற்சவமும், 16ம் தேதி ஆடுதுறை வீரசோழன் ஆற்றங்கரையிலிருந்து அலகு காவடிகளுடன் 1008 பால்குடம் ஊர்வலமும் நடக்கிறது மேலும் 10 நாட்கள் நடைபெறும் இத்திருவிழாவில் பல்வேறு கலை நிகழ்ச்சிகளும் நடக்கிறது.விழா குழுவினர் ஏற்பாடுகளை செய்துள்ளனர்.

The post ஆடுதுறை மதுரகாளியம்மன் கோயிலில் பவளகாளி திருநடன உற்சவம் appeared first on Dinakaran.

Tags : Pavalkali Thirunadana Utsavam ,Aduthurai Madurakaliamman Temple ,Thiruvidaimaruthur ,Aduthurai ,Mathura Kaliyamman Temple ,Thirunadana Utsavam ,
× RELATED கூடுதல் கட்டிடம் கட்டித்தர கோரி மாணவர்களின் பெற்றோர் ஊர்வலம்