சென்னை: அனைத்து மருத்துவக் கல்லூரி மருத்துவமனைகளிலும் நோயாளிகளின் விவரங்கள், ஆவணங்கள் முறையாக பராமரிக்க வேண்டும் என தேசிய மருத்துவ ஆணையம் (என்எம்சி) தெரிவித்துள்ளது.இதுதொடர்பாக என்எம்சி செயலாளர் ராகவ் லங்கர் வெளியிட்ட அறிவிப்பு:
மருத்துவமனைகளுக்கு வரும் நோயாளிகளின் அனைத்து விதமான விவரங்களையும், அவர்களுக்கு மேற்கொள்ளப்படும் பரிசோதனைகள் குறித்த தரவுகளையும் ஆவணப்படுத்த வேண்டும். உள்நோயாளிகளாக அனுமதிக்கப்படுவோரின் ஆவணங்களில் துறைசார் மருத்துவர் மற்றும் முதுநிலை உறைவிட மருத்துவர் கையொப்பமிட்டிருத்தல் அவசியம். அதேபோன்று நோயாளிகளின் மருத்துவ பரிசோதனை ஆவணங்களிலும் அத்தகைய சான்றொப்பம் இருத்தல் கட்டாயம்.போலி ஆவணங்களோ, விவரங்களோ இருப்பது கண்டறியப்பட்டால் சம்பந்தப்பட்ட மருத்துவக் கல்வி நிறுவனங்கள் மீதும், மருத்துவர்கள் மீதும் நடவடிக்கை எடுக்கப்படும்.
