×

தஞ்சாவூர் கலைஞர் அறிவாலயத்தில் திமுக இளைஞர் அணி நிர்வாகிகளுக்கான நேர்காணல்

தஞ்சாவூர் ஏப்.5: தஞ்சாவூர் கலைஞர் அறிவாலயத்தில் நேற்று நடந்த நடக்கும் தி.மு.க. இளைஞர் அணி பொறுப்புகளுக்கான நேர்காணலில் அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் கலந்து கொண்டார். தஞ்சை கலைஞர் அறிவாலயத்தில் தி.மு.க. இளைஞரணி மாவட்ட, மாநகர அமைப்பாளர், துணை அமைப்பாளர் பொறுப்புகளுக்கான நேர்காணல் நேற்று மாலை நடைபெற்றது. புதுக்கோட்டை வடக்கு, புதுக்கோட்டை தெற்கு, தஞ்சை வடக்கு, தஞ்சை தெற்கு, தஞ்சை மத்திய மாவட்ட தி.மு.க. இளைஞர் அணியை சேர்ந்தவர்களுக்கு இந்த நேர்காணல் நடைபெற்றது. தி.மு.க. இளைஞரணி செயலாளரும், அமைச்சருமான உதயநிதி ஸ்டாலின், பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பின் மகேஷ் பொய்யாமொழி ஆகியோர் கலந்து கொண்டு நேர்காணலை நடத்தினர்.

நேர்காணலில் கலந்து கொள்ள வரும் விண்ணப்பதாரர்கள் ஒவ்வொருவரும் தங்களுடைய வயதை நிரூபிப்பதற்கான சான்றிதழ், உறுப்பினர் அட்டை, இளை ஞர் அணி போன்ற அமைப்புகளில் ஏற்கனவே பணியாற்றியிருந்தால் அதுதொடர்பான புகைப்படம் மற்றும் ஆவணங்களுடன் கலந்து கொள்ள வேண்டும் என ஏற் கனவே தி.மு.க. இளைஞர் அணி செயலாளர் உதயநிதி ஸ்டாலின் அறிவித்துள்ளார்.

முன்னதாக தஞ்சை மத்திய மாவட்ட செயலாளரும் திருவையாறு சட்டமன்ற உறுப்பினர் துரை சந்திரசேகர், தஞ்சாவூர் எம்எல்ஏ டி.கே.ஜி நீலமேகம், தஞ்சை மாநகராட்சி மேயரும், மாநகர செயலாளர் ராமநாதன், துணை மேயரும் மாநில மருத்துவர் அணி துணை செயலாளருமான அஞ்சுகம் பூபதி, மாவட்ட ஊராட்சி குழு தலைவர் உஷா புண்ணியமூர்த்தி, மற்றும் ஒன்றிய செயலாளர்கள் அமைச்சர் உதயநிதி ஸ்டாலினுக்கு வரவேற்பு அளித்தனர்.

மேலும் இந்த நேர்காணலில் அப்துல் மாலிக், பிரகாஷ் ராஜா இனியவன் இளையராஜா உள்பட ஒம்போது மாநில இளைஞரணி துணை செயலாளர்கள் கலந்து கொண்டனர். இதில் ஏராளமான இளைஞர் அணியை சேர்ந்தவர்கள் விண்ணப்பங்களை அமைச்சரிடம் வழங்கினர்.

The post தஞ்சாவூர் கலைஞர் அறிவாலயத்தில் திமுக இளைஞர் அணி நிர்வாகிகளுக்கான நேர்காணல் appeared first on Dinakaran.

Tags : DMK ,Thanjavur Artist Academy ,Thanjavur ,Thanjavur Kalayan Vidyalaya ,Minister ,Udayanidhi ,Thanjavur Kalainar Vidyalaya ,Dinakaran ,
× RELATED திமுக ஒன்றிய செயலாளர்கள் ஆலோசனை கூட்டம்