×

எடப்பாடியை வரவேற்க பாஜ துண்டுடன் மாணவர்கள்: கல்வித்துறை விசாரணை

கிருஷ்ணகிரி: கிருஷ்ணகிரி மாவட்டம், ராயக்கோட்டையில் அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமியை வரவேற்க பாஜ துண்டுடன், பள்ளி சீருடையில் நின்றிருந்த மாணவர்களால் சர்ச்சை எழுந்துள்ளது. தமிழக சட்டமன்ற எதிர்க்கட்சி தலைவரும், அதிமுக பொதுச்செயலாளருமான எடப்பாடி பழனிசாமி, தமிழகம் முழுவதும் பிரசாரம் மேற்கொண்டு வருகிறார். நேற்று கிருஷ்ணகிரி மாவட்டம், வேப்பனஹள்ளி சட்டமன்ற தொகுதிக்கு உட்பட்ட ராயக்கோட்டை பேருந்து நிலையம் அருகில், அதிமுக நிர்வாகிகள், தொண்டர்கள் காத்திருந்தனர்.

இவர்களுடன் கூட்டணியில் உள்ள பாஜ நிர்வாகிகளும் நின்றிருந்தனர். அவர்களுடன் 6 முதல் 8ம் வகுப்பு வரை படிக்கும் மாணவர்கள் 3 பேர், பள்ளி சீருடையுடன், கழுத்தில் பாஜ துண்டுடன் நின்றிருந்தனர். இதனால் பெரும் சர்ச்சை ஏற்பட்டுள்ளது. அந்த மாணவர்கள் எந்த பள்ளியை சேர்ந்தவர்கள், பள்ளி வேளை நேரத்தில் எப்படி அவர்கள் இந்த நிகழ்ச்சிக்கு சென்றனர் என்பது குறித்து கல்வித்துறை அதிகாரிகள் விசாரணை மேற்கொண்டுள்ளனர்.

Tags : BJP ,Edappadi ,Education Department ,Krishnagiri ,AIADMK ,General Secretary ,Edappadi Palaniswami ,Rayakottai, Krishnagiri district ,Tamil Nadu ,Legislative ,Assembly ,Opposition ,Tamil Nadu.… ,
× RELATED செல்போனில் பேசியபடி தண்டவாளத்தில்...