×

மின்வாரிய டிஜிபி உள்பட 4 ஐபிஎஸ் அதிகாரிகள் அதிரடி மாற்றம்

சென்னை: மின்வாரிய விஜிலென்ஸ் டிஜிபி பிரமோத்குமார் உள்பட 4 ஐபிஎஸ் அதிகாரிகள் அதிரடியாக மாற்றம் செய்யப்பட்டுள்ளனர். இது குறித்து உள்துறைச் செயலாளர் தீரஜ்குமார் வெளியிட்டுள்ள உத்தரவில், ‘மின்வாரிய விஜிலன்ஸ் டிஜிபி பிரமோத்குமார், ஊர்க்காவல்படை டிஜிபியாக மாற்றம் செய்யப்பட்டுள்ளார். மாநில குற்ற ஆவணக்காப்பக ஏடிஜிபி ஆயூஸ் மணி திவாரி, மின்வாரிய விஜிலன்ஸ் டிஜிபியாக நியமிக்கப்பட்டுள்ளார். ஊர்க்காவல்படை ஐஜியாக இருந்த ஜெய, குற்ற ஆவணக்காப்பக ஐஜியாகவும், திருச்சி சரக டிஐஜியாக இருந்த வருண்குமார், சிபிசிஐடி டிஐஜியாகவும் நியமிக்கப்பட்டுள்ளனர். இவ்வாறு அந்த உத்தரவில் கூறப்பட்டுள்ளது.

Tags : Electricity Board DGP ,Chennai ,Electricity Board Vigilance ,DGP ,Pramod Kumar ,Home Secretary ,Dheeraj Kumar ,Home Guard ,State Crime Records Bureau… ,
× RELATED அரசு பணிகளில் இட ஒதுக்கீடு...