வனத்துறையிடம் ஒப்படைப்பு மரக்காணத்தில் சுற்றிய வெளிநாட்டு ஆந்தை

மரக்காணம், டிச. 8: மரக்காணம் மற்றும் சுற்றுப்புற பகுதிகளுக்கு பல்வேறு நாடுகளில் இருந்து ஆண்டுதோறும் ஆயிரக்கணக்கான பறவைகள் வருகிறது. இதுபோல் வரும் பறவைகள் இங்கு இனபெருக்கம் செய்து பருவ காலமாற்றம் துவங்கியதும் மீண்டும் அவைகள் அந்தந்த நாடுகளுக்கு சென்று விடுகிறது. மரக்காணம் அருகே ஆலப்பாக்கம் கிராமத்தில் உள்ள விவசாயி தோட்டத்தில் நேற்றும் ஒரு அபூர்வ வகை வெளிநாட்டு ஆந்தை வந்துள்ளது. இந்த ஆந்தையை சில காகங்கள் கொத்தி துன்புறுத்தியுள்ளது. இதனைப்பார்த்த அந்த விவசாயி காகங்களிடம் இருந்து ஆந்தையை மீட்டு பாதுகாப்பாக மரக்காணம் எடுத்து வந்தார். மேலும் இதுகுறித்து சமூக ஆர்வலர்களின் உதவியுடன் விழுப்புரம் மாவட்ட வனத்துறை அலுவலருக்கு தகவல் கொடுத்தனர். இதனைத்தொடர்ந்து வனத்துறை அலுவலர்கள் சம்பவ இடத்திற்கு வந்து வெளிநாட்டு ஆந்தையை கைப்பற்றி பாதுகாப்பாக மரக்காணம் பகுதியில் இருக்கும் அடர்ந்த காட்டில் விட்டனர்.

Related Stories:

>