×

பெரம்பலூர் அருகே உள்ள சிறுவாச்சூர் மதுரகாளிம்மன் கோயில் கும்பாபிஷேகம் இன்று நடக்கிறது

பெரம்பலூர்,ஏப்.5: பெரம்பலூர் அருகே உள்ள சிறுவாச்சூர் கிராமத்தில் அமைந்துள்ள புகழ்பெற்ற அருள்மிகு மதுரகாளியம் மன் திருக்கோவில் திருக் குடமுழுக்கு விழா இன்று (5ம்தேதி) நடைபெறுகிறது.இதற்காக பிரமாண்ட ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளது. பெரம்பலூர் மாவட்டம், சிறுவாச்சூரில் மூர்த்தி தலம் தீர்த்தத்தினால் ஓங்கிய சிறப்பு பெற்றதும், ஸ்ரீ ஆதிசங்கரர் வழிபாடு செய்ததும், சர்வ வல்லமை பெற்றதும், கண்ணீர் மல்க கசிந்துருகும் அடியவருக்கு கண்கண்ட தெய்வமாய் விளங்குவதும், ஊமையும், செவிடும் நீக்கும் சக்தி நாயகியாய் நின்று அருளுவதும், மலடு நீக்கி மக்கள் பேறு அளிக்கும் வரப்பிரசாத அன்னையாய் சிறந்த நிற்பதும், பேய், பிசாசு, ஏவல், பில்லி சூனியம் போன்றவற்றின் இடர் அகற்றுவதுமான, இனிய சக்தி தெய்வமாய் வேண்டுவோர்க்கு வேண் டுவன நல்கி அருள்பாலித்து வருகின்றர்.

அன்னை பரா சக்தி சிறுவாச்சூர் மதுர காளியம்மனுக்கு பங்குனி மாதம் 22 ஆம் நாள் சதுர்த்தி திதி, உத்திர நட்சத்திரம் கூடிய நன்னாளில், இன்று (5ம் தேதி) காலை 9 மணிக்கு மேல் 10. 15 மணிக்குள் ரிஷப லக்னத்தில் திருக்குடமுழுக்கு விழா, தருமபுரம் ஆதீனம் 27 வது குரு மகா சன்னி தானம் ஸ்ரீலஸ்ரீ மாசிலா மணி தேசிக ஞானசம்பந்த பரமாசாரிய சுவாமிகள் முன்னிலையில் வெகு விம ரிசையாகநடைபெறுகிறது.தமிழக அமைச்சர்கள், அரசு த்துறை செயலாளர்கள், அறநிலையத்துறை ஆ ணையர், கலெக்டர், எஸ்பி, நாடாளுமன்ற, சட்டமன்ற உறுப்பினர்கள், மாவட்ட அறங்காவலர் நியமனக் குழு தலைவர் மற்றும் உறு ப்பினர்கள், இந்து சமய அற நிலைய துறையினர், உள் ளாட்சி அமைப்பு பிரதிநிதி கள் உள்ளிட்ட பலரும் விழா வில் கலந்துகொண்டு சிற ப்பிக்க உள்ளனர்.

திருக் குடமுழுக்கு விழா வையொட்டி இன்று (5 ம்தேதி) காலை 5 மணிக்கு திருமேனி சுத்திகரித்தல் தற்காப்பு அணிவித்தல் நடக்கிறது. 8 மணிக்கு யாக சாலையிலிருந்து இறை சக்திகளை மூலவருக்கு சேர்த்தல், 96 வகையான மூலிகை பொருட்கள் பழ வகைகள், வேள்வி இடுதல், வேள்வி நிறைவு பெறுதல் நடக்கிறது. காலை 9 மணி க்கு வேள்விச் சாலையில் இருந்து இறை குடங்கள் புறப்பாடு, 9.45 மணி க்கு விமானம் ராஜகோபுரம் திருக்குட நன்னீராட்டு நடை பெறுகிறது.

10 மணிக்கு மேல் மதுர காளியம்மன் மற் றும் அய்யனார் பரிவாரங்க ளுக்கு திருக்குட நன்னீரா ட்டு மற்றும் தீபாராதனை நடைபெறுகிறது. 10:30 மணிக்கு மேல் புனித நீர் பிரசாதம் வழங்குதல் சிற ப்பு அன்னதானம் நடைபெ றுகிறது. மதியம் 3மணிக்கு கருவறை மூர்த்திகளுக்கு பெரும் நன்னீராட்டல் நடக் கிறது. இரவு 8மணிக்கு அம் பாள் திருவீதி எழுந்தருளல் நடக்கிறது. விழாவிற்கான ஏற்பாடுகளை இந்து சமய அறநிலைத்துறை உதவி ஆணையர் லட்சுமணன், செயல் அலுவலர் வேல்மு ருகன் மற்றும் திருப்பணி குழு தலைவர் கங்காதரன் மற்றும் உறுப்பினர்கள் மற் றும் கோவில் நிர்வாகத்தி னர் செய்துள்ளனர்.

சிறப்பு ஏற்பாடுகள்…
சிறுவாச்சூர் கோயில் திருக்குடமுழுக்கையொட்டி பெரம்பலூர் மாவட்ட கலெக்டர் கற்பகம் ஏற்பாட்டில் விழா விற்கு வரும் பக்தர்களுக் கான சுத்தமான குடிநீர், கழி ப்பிட, சுகாதார வசதிகள் அனைத்தும் மேற்கொள்ள ப்பட்டுள்ளது. மாவட்ட எஸ்பி ஷ்யாம்ளா தேவி ஏற்பாட்டில் ஆயிரத்திற்கும் மேற்பட்ட போலீசார் குவிக் கப்பட்டு பாதுகாப்பு ஏற்பா டுகள் மேற்கொள்ளப்பட் டுள்ளன. சிறுவாச்சூர் கோயில் கும்பாபிஷேகத்தை யொட்டி போக்கு வரத்தில் பாதிப்பு ஏற்படாதிருக்க இன்று அதிகாலை 4 மணி முதல் பகல் 2 மணி வரை திருச்சி சென்னை தேசிய நெடுஞ்சாலையில் செல் லும் வாகனங்கள் அரிய லூர் வழியாக செல்ல ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

The post பெரம்பலூர் அருகே உள்ள சிறுவாச்சூர் மதுரகாளிம்மன் கோயில் கும்பாபிஷேகம் இன்று நடக்கிறது appeared first on Dinakaran.

Tags : Siruvachur Madhurakalimman Temple ,Kumbabhishekam ,Perambalur ,Arulmiku Madurakaliyam ,Siruvachur ,Thiruk Kudamuzku ,Siruvachur Madhurakalimman Temple Kumbabhishekam ,
× RELATED தேர்தல் நடத்தை விதிகளை பின்பற்றி...