×

குளித்தலை அய்யர்மலை கோயில் பங்குனி உத்திர தெப்ப உற்சவ விழா

குளித்தலை, ஏப். 5: குளித்தலை அய்யர்மலைக்கோவில் பங்குனி உத்திர தெப்ப உற்சவ விழா நடந்தது. கரூர் மாவட்டம் குளித்தலை ஆர் எஸ் ரோட்டில் இருந்து பரிசல் துறை செல்லும் சாலையில் உள்ளது அய்யர்மலை ரத்தினகிரீஸ்வரர் கோவிலுக்கு சொந்தமான தெப்பக்குளம். இந்த தெப்பக்குளத்தில் பங்குனி உத்திரத்தன்று அய்யர் மலையில் இருந்து உற்சவர் சாமி குளித்தலைக்கு வரவழைக்கப்பட்டு முக்கிய வீதி வழியாக வலம் வந்து தெப்பக்குளத்தை அடைந்து சிறப்பு அலங்காரத்தில் தெப்ப உற்சவம் நடைபெறுவது வழக்கமாக இருந்து வந்துள்ளது. பல ஆண்டு காலமாக இந்த நடைமுறை பின்பற்றாமல் இருந்த நிலையில் பக்தர்கள் உபயதாரர்கள் பெரும் முயற்சியால் கடந்த சில ஆண்டுகளாக தெப்ப உற்சவம் வெகு சிறப்பாகநடைபெற்று வருகிறது.

அதன்படி இந்த ஆண்டு ஏப்ரல் மாதம் 4ம் தேதி பங்குனி உத்திரத்தன்று நேற்று குளித்தலை ரயில்வே ஸ்டேஷன் அருகில் பரிசல் துறை ரோட்டில் உள்ள ரத்னகிரீஸ்வரர் கோவிலுக்கு சொந்தமான தெப்பக்குளத்தில் அய்யர்மலை சுரும்பார் குழலி உடனுறை ரத்தினகிரீஸ்வரர் தெப்ப உற்சவம் இரவு 7 மணிக்கு வெகு விமர்சையாக நடைபெற்றது. இதில் எம்எல்ஏ மாணிக்கம், டிஎஸ்பி ஸ்ரீதர் இந்து அறநிலையத்துறை உதவி ஆணையர் ஜெய தேவி, செயல் அலுவலர் அனிதாமற்றும் தெப்ப உற்சவ குழுவினர் மற்றும் ஆயிரக்கணக்கான பக்தர்கள் கலந்து கொண்டனர்.

The post குளித்தலை அய்யர்மலை கோயில் பங்குனி உத்திர தெப்ப உற்சவ விழா appeared first on Dinakaran.

Tags : Kulithalai ,Ayyarmalai Temple Panguni Uthra Theppa Utsava Festival ,Panguni Uthra Theppa Utsava ceremony ,Kulithalai Ayyarmalai temple ,Karur District Kulithalai ,Kulithalai Ayyarmalai Temple Panguni Uthra Theppa Festival ,
× RELATED குளித்தலை அருகே ஓராண்டாக முறையாக...