×

குடியாத்தம் தொழிலதிபர் வீட்டில் நகை, துப்பாக்கி, தோட்டாக்கள் திருடிய கும்பலை பிடிக்க 2 தனிப்படை

குடியாத்தம், டிச.7: குடியாத்தம் அடுத்த கோவிந்தாபுரத்தை சேர்ந்தவர் சந்திரன்(65), தொழிலதிபர். இவரது மகள் சுபாஷினி, சிதம்பரம் பல்கலைக்கழகத்தில் பிஎச்டி படித்து வருகிறார். இவரது படிப்பு தொடர்பாக மனைவி ரேவதி மற்றும் மகளுடன் கடந்த 3ம் தேதி சிதம்பரத்திற்கு சென்றிருந்த சந்திரன், நேற்றுமுன்தினம் மாலை வீடு திரும்பினார். அப்போது வீட்டின் முன்பக்க கதவும், பீரோவும் உடைக்கப்பட்டு 31 சவரன் தங்க நகைகள், 3 கிலோ வெள்ளி, ₹3 லட்சம் திருட்டு போயிருந்தது கண்டு அதிர்ச்சியடைந்தார். மேலும், தனது பாதுகாப்புக்காக அனுமதியுடன் வைத்திருந்த ₹1 லட்சம் மதிப்பிலான கைத்துப்பாக்கி, 30 தோட்டாக்கள், வீட்டில் இருந்த சிசிடிவி கேமரா ‘ஹார்டுடிஸ்க்கையும்’ மர்ம ஆசாமிகள் திருடிச் சென்றது தெரியவந்தது.

இதுதொடர்பாக குடியாத்தம் டிஎஸ்பி தரன் மேற்பார்வையில், டவுன் இன்ஸ்பெக்டர் சீனிவாசன், தாலுகா இன்ஸ்பெக்டர் பார்த்தசாரதி ஆகியோர் தலைமையில் 2 தனிப்படை அமைக்கப்பட்டுள்ளது. இவர்கள் திருட்டு நடந்த வீட்டின் அருகே உள்ள சிசிடிவி கேமரா பதிவுகள், குடியாத்தம், கே.வி.குப்பம் பகுதியில் முக்கிய இடங்களில் உள்ள கேமரா பதிவுகளில் சந்தேகப்படும் நிலையில் ஆட்கள் நடமாட்டம் உள்ளதா? என ஆய்வு செய்து வருகின்றனர். மேலும் கொள்ளையர்களையும் தீவிரமாக தேடி வருகின்றனர்.

Tags : businessman home ,gang ,Gudiyatham ,personal ,
× RELATED கும்மிடிப்பூண்டி அருகே காங்....