×

கலெக்டர் உத்தரவை மீறி மகாவீர் ஜெயந்தி நாளில் இறைச்சி கடை திறப்பு: 37 கிலோ பறிமுதல்

திருவள்ளூர்: மகாவீர் ஜெயந்தி முன்னிட்டு மதுபான கடை, இறைச்சி கடை ஆகியவற்றை மூட வேண்டும் என திருவள்ளூர் மாவட்ட உத்தரவிட்டிருந்தார். இதனை அடுத்து திருவள்ளூர் நகராட்சி நிர்வாகம் சார்பில், நகராட்சி ஆணையர் கா.ராஜலட்சுமி உத்தரவின் பேரில் இறைச்சிக் கடைகள் திறக்க அனுமதி இல்லை என நோட்டீஸ் கொடுத்தனர். இந்நிலையில் திருவள்ளூர் நகராட்சிக்குட்பட்ட பெரிய குப்பம், ஜே.என்.சாலை, பஜார் தெரு காமராஜர் தெரு ஆகிய பகுதிகளில் நகராட்சி சுகாதார அலுவலர் கோவிந்தராஜி மற்றும் சுகாதார ஆய்வாளர்கள் சுதர்சன், வெயிலுமுத்து ஆகியோர் அதிரடி சோதனை மேற்கொண்டனர்.

இந்நிலையில் அரசின் உத்தரவை மீறி ஒரு சிலர் இறைச்சி கடை திறந்து விற்பனை செய்து கொண்டிருந்தனர். இதனைத் தொடர்ந்து நகராட்சி ஆணையர் கா.ராஜலட்சுமி உத்தரவின் பேரில் இறைச்சி கடை திறந்து விற்பனைக்காக வைத்திருந்த 37 கிலோ இறைச்சியை பறிமுதல் செய்து அதற்கு கிருமி நாசினி தெளித்து புதைக்கப்பட்டதாக நகராட்சி சுகாதார அலுவலர் ஆர்.கே.கோவிந்தராஜி தெரிவித்தார்.

The post கலெக்டர் உத்தரவை மீறி மகாவீர் ஜெயந்தி நாளில் இறைச்சி கடை திறப்பு: 37 கிலோ பறிமுதல் appeared first on Dinakaran.

Tags : Mahavir Jayanti ,Thiruvallur ,
× RELATED போலீசிடம் தகராறு வாலிபர் மீது வழக்கு