25 கார்களில் மயிலாடுதுறை நோக்கி சென்ற ஹரிநாடாரை தடுத்து நிறுத்திய போலீசார்: கும்பகோணத்தில் பரபரப்பு

கும்பகோணம், டிச.7: திருச்சியிலிருந்து பனங்காட்டுபடை கட்சியின் மாநில ஒருங்கிணைப்பாளர் ஹரிநாடார் 25 கார்கள் பின்தொடர மயிலாடுதுறைக்கு நேற்று புறப்பட்டார். அப்போது திருச்சி, தஞ்சாவூர் போன்ற இடங்களில் உள்ள காமராஜர் சிலைக்கு மாலை அணிவித்து விட்டு கும்பகோணம் நோக்கி வந்தார். இவருடன் கார்களில் வந்தவர்கள் அதிக கூச்சல் எழுப்பியபடி போக்குவரத்துக்கு இடையூறு ஏற்படுத்தியவாறு வந்ததால், மாவட்ட எஸ்பி உத்தரவுப்படி கும்பகோணம் செட்டி மண்டபம் புறவழிச்சாலையில் ஏராளமான போலீஸார் குவிக்கப்பட்டனர். பின்னர் நேற்று மாலை ஹரிநாடார் செட்டிமண்டபம் அருகே வந்தபோது,

டிஎஸ்பி பாலகிருஷ்ணன் “நீங்கள் இதன்பிறகு செல்ல முடியாது எனக்கூறி தடுத்து நிறுத்தினார்”. அப்போது ஹரிநாடார் மயிலாடுதுறை அருகே குத்தாலத்தில் ஒரு திருமண நிகழ்ச்சிக்காக செல்வதாக கூறினார். டிஎஸ்பி உங்களோடு மூன்று கார்கள் மட்டும் அனுமதிக்கிறோம் என கூறினார். இதனால் சிறிது நேரம் வாக்குவாதம் ஏற்பட்டது. பின்னர் ஹரிநாடாருடன் மூன்று கார்களை அனுமதித்தனர். பின்னர் சிறிது நேரம் கழித்து இடைவெளியோடு கார்களை குத்தாலம் செல்ல அனுமதித்தனர். இதனால் பரபரப்பு ஏற்பட்டது.

Related Stories:

>