×

திருத்தேர்வளை சாலையை சீரமைக்க கோரிக்கை

ஆர்.எஸ்.மங்கலம்,ஆக.11: ஆர்.எஸ்.மங்கலம், ஆனந்தூர் அருகே திருத்தேர்வளை கீழக்கோட்டை, நாடார்கோட்டை பகுதிக்கு செல்லும் சாலை மிகவும் பழுதடைந்து மோசமாக உள்ளத என அப்பகுதி மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். இப்பகுதிக்கு செல்லும் சாலை தார்ச்சாலையாக இல்லாமல் இருப்பதால் விவசாயிகள் மற்றும் பள்ளி,கல்லூரி மாணவ,மாணவிகள் மழை காலங்களில் மிகுந்த சிரமப்பட்டு வருகின்றனர்.

இதுகுறித்து கடந்த ஆட்சியில் பலமுறை கோரிக்கை விடுத்தும் எந்த பயனும் இல்லை என அப்பகுதி மக்கள் குற்றச்சாட்டுகின்றனர். தேர்தலுக்கு வாக்கு சேகரிக்க வரும் போது தார்ச்சாலை அமைத்து தருகிறோம் என்று வாக்குறுதி தருகின்றனர்.

பின்னர் மக்களின் சிரமத்தை கண்டு கொள்வதில்லை என குற்றம் சாட்டும் இப்பகுதி பொதுமக்கள், விவசாயிகள் மற்றும் பள்ளி மாணவ,மாணவியர் நலனை கருத்தில் கொண்டு போர்கால அடிப்படையில் தார்ச்சாலை அமைத்து தர நடவடிக்கை எடுக்க வேண்டும் என அப்பகுதினர் கோரிக்கை விடுத்துள்ளனர்.

 

Tags : R. S. ,MANGALAM ,Natharkottai ,Mangalam, Anandoor ,
× RELATED ஓய்வூதியர் தின விழா