×

3 மணி நேரம் பெய்த கனமழையால் பெரியார் நீர்வீழ்ச்சியில் கடும் வெள்ளப்பெருக்கு

கல்வராயன்மலை, ஆக. 11: கள்ளக்குறிச்சி மாவட்டம் கல்வராயன்மலை பகுதியில் நேற்று காலை கனமழை பெய்தது. சுமார் 3 மணி நேரத்துக்கு மேலாக பெய்த கனமழை காரணமாக பெரியார் நீர்வீழ்ச்சியில் கடும் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது. இதனால் பெரியார் நீர்வீழ்ச்சியில் சுற்றுலா பயணிகள் குளிக்க தடை விதிக்கப்பட்டது. தண்ணீர் வரத்து சீரான பிறகே மீண்டும் நீர்வீழ்ச்சியில் சுற்றுலா பயணிகள் குளிக்க அனுமதிக்கப்படுவார்கள் என வனத்துறையினர் தெரிவித்தனர். இந்நிலையில், கோமுகி அணையின் நீர்பிடிப்பு பகுதிகளான கல்வராயன்மலை பகுதியில் பெய்து வரும் தொடர் மழை காரணமாக கல்படை, பொட்டியம், மாயம்பாடி ஆறுகளின் வழியாக கோமுகி அணைக்கு தொடர்ந்து நீர் வந்து கொண்டிருக்கிறது. இதனால் அணையின் நீர்மட்டம் உயர்வதற்கு வாய்ப்புள்ள நிலையில், விரைவில் பாசனத்துக்காக அணையில் இருந்து நீர் திறக்கப்படும் என பொதுப்பணித்துறை அதிகாரிகள் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Tags : Periyar Falls ,Kalvarayanmalai ,Kallakurichi district ,Periyar Falls… ,
× RELATED ஓய்வூதியர் தின விழா