×

வின்ஸ் சிபிஎஸ்இ பள்ளியில் சிவப்பு நிற தினவிழா கொண்டாட்டம்

நாகர்கோவில், ஆக.11: சுங்கான்கடை, வின்ஸ் சிபிஎஸ்இ பள்ளி மழலையர் பிரிவு சார்பாக, சிவப்பு நிற தினம் கொண்டாடப்பட்டது. மாணவர்களுக்கு சிவப்பு நிறத்தின் முக்கியத்துவத்தை உணர்த்துவதும் ரத்த தானம் செய்வோம் உயிரைக் காப்போம் என்ற கருப்பொருளை மையமாகக் கொண்டு அவர்களின் உற்சாகத்தையும், ஆராய்வதற்கான ஆர்வத்தையும் தூண்டுவதே இத்தினத்தின் நோக்கமாகும். குழந்தைகள் அனைவரையும் ஈர்க்கும் வகையில் வசீகரமான சிவப்பு வண்ண ஆடைகளில் சூழ்ந்து உற்சாகத்துடன், அன்பு மற்றும் தைரியத்தின் உணர்வுகளைத் தூண்டும் இனிமையான, இணக்கமான மற்றும் புத்துணர்ச்சியூட்டும் சூழலை உருவாக்கினர். ஆசிரியர்களும் சிவப்பு நிறத்தில் ஆடையணிந்து விழாவை சிறப்பித்தனர். மாணவி மீனாட்சி வரவேற்றார்.

மாணவர்கள் ஸ்ட்ராபெர்ரி, தக்காளி, ஸ்பைடர் மேன், பிளம், சிவப்பு மிளகாய், செர்ரி, சிவப்பு ரோஜா போல் வேடமணிந்து காட்சியளித்தனர். மழலையர் பிரிவு மாணவர்கள் எனது சிவப்பு பலூன் என்ற தலைப்பில் சிவப்பு நிறம் குறித்த பாடல்களை பாடி நடனம் ஆடினர். மாணவர்கள் ரத்த தானம் செய்வோம் என்ற தலைப்பில் மௌன மொழி நாடகம் நடித்து காட்டினர். இறுதியாக மழலைகள் அணிவகுத்து ரத்த தானம் செய்வோம். உயிரைக் காப்போம் என்று கோஷமிட்டு பேரணியாக சென்றனர். மாணவன் ஜெய்த் நன்றி கூறினார்.

பள்ளி நிறுவனரும் முன்னாள் எம்பியுமான நாஞ்சில் வின்சென்ட் பாலர் பள்ளியில் சிவப்பு நிற தினம் கொண்டாடுவது, படைப்பாற்றல், கற்றல் மற்றும் சமூக தொடர்புகளை ஊக்குவிக்கும் என்றார். அதே வேளையில், இளம் குழந்தைகளை வண்ணங்களுக்கு அறிமுகப்படுத்துவதற்கான ஒரு அற்புதமான வழியாகும் என்று அறிவுறுத்தினார்.நிகழ்ச்சியில் செயலாளர் டாக்டர் கிளாரிசா வின்சென்ட் வழிகாட்டுதலில் முதல்வர் பீட்டர் ஆன்டனி, ஆரம்ப நிலை ஒருங்கிணைப்பாளர் அருள் ஷீலா , மற்றும் மழலையர் பிரிவு ஆசிரியர்கள் ஸ்வீட்லின், சரண்யா, ஜெனிஷியா, அஷ்லின் ரேஷ்மா, சுபிலா, கிரிஜா, அபிஷா மற்றும் பபிஷா ஆகியோர் செய்திருந்தனர்.

Tags : Red Color Day ,Vince CBSE School ,Nagercoil ,Sungakkadai ,
× RELATED 9 சட்டமன்ற தொகுதியிலும் 20, 21ம் தேதிகளில்...