மதுரை, ஆக. 11: மதுரை காந்தி மியூசியத்தில் 2025 – 2026ம் கல்வி ஆண்டிற்கான யோகா வகுப்பு தொடக்க விழா நேற்று நடந்தது. அருங்காட்சியக செயலாளர் நந்தாராவ் தலைமை வகித்தார். ஆராய்ச்சி நிறுவன முதல்வர் தேவதாஸ் யோகா படிப்பை தொடங்கி வைத்து பேசினார்.
‘நிகழ்கால வாழ்க்கையில் யோகாவின் பங்கு’ எனும் தலைப்பில் மகரிஷி யோகா ஆழ்நிலை தியானம் பயிற்சியாளர் கே.தனபாலன் சிறப்புரை ஆற்றினார். காந்தி மியூசிய கல்வி அலுவலர் நடராஜன், இக்னோ உதவி பதிவாளர் (ஓய்வு) டாக்டர் முத்தானந்தம், யோகா ஆசிரியை நந்தினி வாழ்த்துரை வழங்கினர். யோகா மாணவி சிந்துஜா வரவேற்றார். பரணி வாசன் நன்றி கூறினார்.
