கும்பகோணம், டிச.7: கும்பகோணம் உச்சிப்பிள்ளையார் கோவில் முன்பு, வெள்ளாளர் முன்னேற்ற கழகம், அனைத்து வெள்ளாளர் கூட்டமைப்பு, தமிழ்நாடு வ.உ.சி மக்கள் இயக்கம் மற்றும் கும்பகோணம் பகுதி சோழிய வெள்ளாளர் சங்கம் சார்பில் வெள்ளாளர் முன்னேற்றக் கழக கும்பகோணம் ஒன்றிய இளைஞரணி செயலாளர் சரவணன் பிள்ளை தலைமையில் சாலை மறியலில் ஈடுபட்டனர். இதில் அனைத்து வெள்ளாளர்களின் பெயரை மாற்று இனத்தவருக்கு பெயரை வைப்பதற்கு பரிந்துரை செய்த தமிழக அரசை கன்டித்து கோஷங்கள் எழுப்பினர்.