வடமதுரை, ஆக. 11: வடமதுரை கோப்பம்பட்டியை சேர்ந்தவர்கள் ரவிக்குமார் (33). கோபிராஜன் (28). இருவருக்குமிடையே முன்விரோதம் இருந்து வந்த நிலையில் கோபி ராஜன் நேற்று ரவிக்குமார் வீட்டிற்கு சென்று அவர், அவரது மனைவி ராஜலட்சுமியை தகாத வார்த்தைகளால் திட்டியதுடன் செங்கல்லால் தாக்கி கொலை மிரட்டல் விடுத்ததாக தெரிகிறது. இதில் காயமடைந்த தம்பதி சிகிச்சைக்காக திண்டுக்கல் ஜிஹெச்சில் அனுமதிக்கப்பட்டனர். இதுகுறித்த புகாரில் வடமதுரை எஸ்ஐ பாண்டியன் வழக்குப்பதிந்து கோபி ராஜனை கைது செய்தார்.
