×

புகையிலை விற்ற இளம் பெண் கைது

திருச்சி, ஆக. 11: திருச்சியில் புகையிலை விற்ற பெண்ணை போலீசார் கைது செய்து சிறையில் அடைத்தனர். திருச்சி, டவுன் ரயில்வே நிலையம் அருகே தடை செய்யப்பட்ட குட்கா உள்ளிட்ட புகையிலை போதை பொருட்கள் விற்பனை நடப்பதாக கோட்டை போலீசாருக்கு தகவல் கிடைத்தது.

தகவலின் பேரில் போலீசார் அங்கு சென்று நடத்திய விசாரணையில் ஈ.பி.ரோடு, அந்தோணியார் கோவில் தெருவை சேர்ந்த கோமதி(38) என்ற பெண் குட்கா விற்பனையில் ஈடுபட்டு வருவது தெரிய வந்தது. இதனை தொடர்ந்து அவரை கைது செய்த, கோட்டை போலீசார், வழக்கு பதிந்து சிறையில் அடைத்தனர். அவரிடமிருந்து 650 கிராம் புகையிலை பொருட்கள் பறிமுதல் செய்யப்பட்டது.

 

Tags : Trichy ,Fort ,Town Railway Station ,Trichy.… ,
× RELATED கலைஞர் பல்கலைக்கு கையெழுத்திட...