×

ஆன்லைனில் பதிவு செய்ய அழைப்பு

மல்லூர், ஏப்.5: வீரபாண்டி வட்டார வேளாண்மை உதவி இயக்குநர் கிரிஜா வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது: தமிழக அரசின் பல்வேறு துறை சார்ந்த திட்டங்களில், விவசாயிகள் இணைந்து பயன்பெறும் வகையில், வேளாண் அடுக்கு திட்டம் வேளாண்மை துறையால் உருவாக்கப்பட்டு உள்ளது. விவசாயிகள் பயன்பெறும் வகையில், விவசாயிகளின் தனிநபர் மற்றும் நில உடைமை ஆவணங்கள், சாகுபடி பயிர் விவரம் கிரைன்ஸ் என்ற இணைதளத்தில் பதிவேற்றம் மேற்கொள்ள வேண்டும். இதனால் விவசாயிகளின் இணையதளத்தில் பதிவு, அரசின் துறை சார்ந்த விவரங்கள் நேரடியாக செய்வதால் திட்டங்களுக்கு முன்னுரிமை அடிப்படையில் விவசாயிகளின் அடிப்படை மற்றும் பயிர் பயிர் விவரங்களை தெரிந்து கொண்டு, மேலும் நிதி திட்டப் பலன்கள் ஆதார் எண் அடிப்படையில் நேரடி பணப்பரிமாற்றம் மூலம், விவசாயிகளின் வங்கி கணக்குக்கு நேரடியாக அனுப்ப வழிவகுக்கிறது.

விவரங்கள் அதற்கேற்றவாறு அரசின் திட்டங்களில் உள்ள பயன்களை, விவசாயிகளுக்கு அளிக்க முடியும். இதற்காக வீரபாண்டி வட்டார விவசாயிகள் கிரைன்ஸ் வலைதளத்தில் பதிவு செய்ய ஆதார் நகல், புகைப்படம் வங்கி கணக்கு புத்தக நகல், நிலபட்டா, ஆவண நகல் குடும்ப அட்டை நகல் மற்றும் கைப்பேசி எண் ஆகிய விவரங்களுடன், கிராம நிர்வாக அலுவலர், உதவி வேளாண்மை அலுவலர் மற்றும் உதவி தோட்டக்கலை அலுவலர்களை அணுகி மேற்கண்ட வலைத்தளத்தில் பதிவு மேற்கொண்டு பயன் பெறலாம். இவ்வாறு அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.

The post ஆன்லைனில் பதிவு செய்ய அழைப்பு appeared first on Dinakaran.

Tags : Mallur ,Assistant Director of ,Veerapandi district ,Girija ,Tamil Nadu government ,Dinakaran ,
× RELATED சேலம்-கரூர் ரயில் 1 மணி நேரம் தாமதமாக இயங்கும்