மணப்பாறை, ஆக.11: மணப்பாறை அடுத்த வையம்பட்டி ஒன்றியம் கல்பட்டியில் கடந்த சில நாட்களுக்கு முன் நடைபெற்ற கிராம திருவிழாவின்போது, இரு சமூகத்தினரிடையே பைக் அதிவேகமாக ஓட்டி சென்றது தொடர்பாக தகராறு ஏற்பட்டது. இதில் ஒரு சமூகத்தினர் கொடு த்த புகாரின் பேரில் வன்கொடுமை சட்டத்தின் கீழ் 20க்கும் மேற்பட்டவர்கள் மீது வழக்கு பதியப்பட்டது.
இதையடுத்து மற்றொரு தரப்பினர் காவல்துறையில் முறையான விசாரணை இல்லை என்றும், பதியப்பட்ட வன்கொடுமை தடுப்பு சட்ட வழக்கினை ரத்து செய்யக்கோரி பல்வேறு போராட்டங்கள் நடத்தி வந்தனர். இந்நிலையில் நேற்று மணப்பாறையில் அமைதி பேரணி நடத்துவதாக அறிவிக்கப்பட்டது. அதற்கு காவல்துறையில் அனுமதி மறுத்த நிலையில், பாரதியார் நகர் மைதானத்தில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இதில் சுமார் 3000க்கும் மேற்பட்டோர் பங்கேற்றதால் 500க்கும் மேற்பட்ட போலீசார் பாதுக்காப்பு பணியில் ஈடுபட்டனர்.
