×

தொழிலாளி பைக்கில் இருந்து விழுந்து சாவு

நெல்லை, ஆக.11: கூடங்குளத்தில் பைக்கில் சென்ற மீன்பிடி தொழிலாளி தவறி விழுந்து பரிதாபமாக இறந்தார்.நெல்லை மாவட்டம் கூடங்குளம் அருகே உள்ள கூத்தன்குழி தெற்கு தெருவை சேர்ந்தவர் சாமி மகன் அஜய் (29), மீன் பிடிக்கும் தொழிலாளி. இவருக்கு திருமணமாகி மனைவியும், ஒரு குழந்தையும் உள்ளது.இந்நிலையில் நேற்று முன்தினம் அதிகாலையில் கூத்தன்குழி கல்லூரி சாலையில் பைக்கில் வந்து கொண்டிருந்தார்.

அப்போது திடீரென அஜய், நிலை தடுமாறி பைக்கில் இருந்து கீழே விழுந்து படுகாயம் அடைந்தார். அவ்வழியாக வந்தவர்கள் அவரை மீட்டு கூடங்குளம் மருத்துவமனையில் சிகிச்சைக்கு அனுமதித்தனர். அங்கு அவர் சிகிச்சை பலனின்றி இறந்தார். இதுகுறித்து கூடங்குளம் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Tags : Paddy ,Sami Mahan Ajay ,Kootankuzhi South Street ,Koodankulam, Nella District ,
× RELATED ஓய்வூதியர் தின விழா