×

முத்துப்பேட்டை அருகே இ. கம்யூ., கிளை கூட்டம்

முத்துப்பேட்டை, ஆக.11: முத்துப்பேட்டை அருகே பெத்தவேளாண்கோட்டத்தில் இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் கிளை கூட்டம் நடைபெற்றது. திருவாரூர் மாவட்டம், முத்துப்பேட்டை அருகே கீழநம்மங்குறிச்சி ஊராட்சி பெத்தவேளாண்கோட்டம் கிராமத்தில் இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் கிளை கூட்டம் மூத்த உறுப்பினர் வடுகையன் தலைமையில் நடைப்பெற்றது. கூட்டத்தில் முக்கிய தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டது.

இதில் முக்கியமாக சேலத்தில் நடைபெறும் இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மாநில மாநாட்டில் கீழநம்மங்குறிச்சி ஊராட்சியில் ஒரு பேருந்து மூலம் கலந்து கொள்வது என்று முடிவு செய்யப்பட்டது. இதில் கட்சி மாவட்ட குழு உறுப்பினர் யோகநாதன், விவசாய தொழிலாளர் சங்க ஒன்றிய செயலாளர் சிவசந்திரன் உள்ளிட்ட நிர்வாகிகள் கலந்துக்கொண்டனர்.

 

Tags : E. Commun. ,Muthupettai ,Communist Party of India ,Pethavelankottam ,Keelanammangurichi ,Muthupettai, Tiruvarur district ,Vadugaiyan ,
× RELATED ஓய்வூதியர் தின விழா