×

சவக்கிடங்கில் நீண்ட நாட்களாக வைக்கப்பட்டிருந்த 9 சடலங்களை அடக்கம் செய்த போலீசார்

தஞ்சாவூர், ஆக 11: தஞ்சாவூர் மருத்துவக்கல்லூரி மருத்துவமனை சவகிடங்கில் நீண்ட நாட்களாக யாரும் உரிமை கோராத சடலங்களை போலீசார் நேற்று நல்லடக்கம் செய்தனர். தஞ்சை நகர கிழக்கு, மேற்கு, தெற்கு, மருத்துவக் கல்லூரி ஆகிய காவல் நிலைய பகுதிகளில் கண்டெடுக்கப்பட்ட 9 சடலங்கள் தஞ்சை மருத்துவக் கல்லூரி மருத்துவமனை பிணவறையில் வைக்கப்பட்டிருந்தது. அந்த 9 சடலங்களும் இது நாள் வரை உரிமை கோராமல் இருந்தது.

இந்த நிலையில், தஞ்சை காவல் கண்காணிப்பாளர் ராஜாராம் தலைமையில் மருத்துவக்கல்லூரி காவல் ஆய்வாளர் சந்திரா, துப்புரவு ஆய்வாளர்களுடன் ஒருங்கிணைந்து தூய்மை பணியாளர்கள் உதவியுடன் ராஜகோரி இடுகாட்டில் நல்லடக்கம் செய்யப்பட்டது. இதில் 6 ஆண் மற்றும் 3 பெண் சடலங்கள் இருந்தது குறிப்பிடத்தக்கது. காவல் துறையினரின் இந்த செயல் பொதுமக்கள் மத்தியில் வரவேற்பை பெற்றுள்ளது.

 

Tags : Thanjavur ,Thanjavur Medical College Hospital Sawkitang ,Thanjay City East ,West, ,South ,Medical College ,
× RELATED ஓய்வூதியர் தின விழா