×

புதுகையில் பெண்ணை கொல்ல முயன்ற வழக்கில் மூன்று பேருக்கு ‘குண்டாஸ்’

புதுக்கோட்டை, ஆக. 11: புதுக்கோட்டையில் பெண்ணைக் கொல்ல முயன்ற வழக்கில் கைது செய்யப்பட்ட 3 பேர் மீது குண்டர் தடுப்புக் காவல் சட்டத்தின் கீழ் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. புதுக்கோட்டை மாவட்டம், ஆலங்குடி பாரதி நகரைச் சேர்ந்த கிருஷ்ணசாமி மனைவி தவமணி(52) என்பவரை கடந்த ஜூலை மாதம் 15ஆம் தேதி நரிமேடு நகர்ப்புற வாழ்விட மேம்பாட்டு வாரியக் குடியிருப்புப் பகுதியைச் சேர்ந்த அய்யப்பன் மகன் பூபதி (30), செல்வம் மகன் மணி (27), செல்வம் மகன் கார்த்திகேயன் (21) ஆகியோர் கொல்ல முயன்றதாக திருக்கோகர்ணம் காவல் நிலைய போலீஸாரால் வழக்கு தொடரப்பட்டு, மூவரும் கைது செய்யப்பட்டு புதுக்கோட்டை சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர்.

இவர்கள் மூவரையும் குண்டர் தடுப்புக் காவல் சட்டத்தின் கீழ் கைது செய்ய, மாவட்ட ஆட்சியருக்கு, மாவட்டக் காவல் கண்காணிப்பாளர் அபிஷேக் குப்தா பரிந்துரைத்தார். இந்தப் பரிந்துரையின்பேரில், மூவரையும் குண்டர் சட்டத்தின் கீழ் கைது செய்ய மாவட்ட கலெக்டர் அருணா உத்தரவிட்டார். இதையடுத்து, மூவரும் திருச்சி மத்திய சிறையில் குண்டர் தடுப்பு காவலில் அடைக்கப்பட்டனர்.

 

Tags : Pudukkottai ,Krishnasamy ,Thavamani ,Alangudi Bharathi Nagar ,
× RELATED ஓய்வூதியர் தின விழா