×

மயிலாடுதுறை அருகே கேங்மேன் தூக்கிட்டு தற்கொலை

மயிலாடுதுறை, ஆக. 11: மயிலாடுதுறை அருகே உளுத்துகுப்பை சாவடி தோப்புத் தெருவை சேர்ந்தவர் ரவி மகன் சூர்யா (வயது 27). இவர் திருவிடைமருதூர் தமிழ்நாடு மின்சார வாரிய அலுவலகத்தில் கேங்மேனாக பணியாற்றி வந்தார். இவருக்கு திருமணம் ஆகி குழந்தை இல்லை. இந்த நிலையில் நேற்று முன்தினம் காலை 7 மணியளவில் சூர்யா தனது வீட்டின் அருகே இருந்த மின்கம்பத்தில் தூக்கில் தொங்கி உள்ளார். இதனைக் கண்ட அவரது குடும்பத்தினர் மற்றும் அக்கம் பக்கத்தினர் சூர்யாவின் உடலை மீட்டு மயிலாடுதுறை அரசு மருத்துவமனைக்கு கொண்டுச் சென்றனர்.

அங்கு பரிசோதனை செய்த டாக்டர்கள் அவர் ஏற்கனவே இறந்து விட்டதாக தெரிவித்துள்ளனர். விசாரணையில், குடும்ப பிரச்சினை காரணமாக மன உளைச்சலில் இருந்த சூர்யா அதிகாலை 3 மணிக்கு எழுந்து சென்று மின் கம்பத்தில் தூக்கி தொங்கியது தெரியவந்தது. இந்த சம்பவம் தொடர்பாக சூர்யாவின் தந்தை ரவி கொடுத்த புகாரின்பேரில் மயிலாடுதுறை இன்ஸ்பெக்டர் சிவக்குமார் மற்றும் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

 

Tags : Mayiladuthurai ,Surya ,Ravi ,Uluthukuppai Chavadi Thoppu Street ,Tamil Nadu Electricity Board ,Thiruvidaimarudur ,
× RELATED ஓய்வூதியர் தின விழா