×

மகாவீர் ஜெயந்தி நாளில் மது விற்ற 39 பேர் கைது

நாமக்கல், ஏப்.5: மகாவீர் ஜெயந்தியையொட்டி நேற்று நாமக்கல் மாவட்டத்தில் உள்ள அனைத்து அரசு மதுபான கடைகளும், அரசின் உத்தரவுப்படி மூடப்பட்டது. இந்த உத்தரவை மீறி சட்டவிரோத மதுவிற்பனை செய்யப்படுகிறதா என போலீசார் கண்காணித்தனர். இந்த சோதனையின் போது, மாவட்டத்தில் பல்வேறு ஊர்களில் உள்ள பெட்டிக்கடைகள், சந்து கடைகளில் சட்ட விரோதமாக மது விற்பனை செய்த 39 பேர் கைது செய்யப்பட்டு, ஜாமீனில் விடுவிக்கப்பட்டனர். அவர்களிடம் இருந்து 480 மதுபாட்டில்கள் பறிமுதல் செய்யப்பட்டது.

பரமத்திவேலூர்: நாமக்கல் மாவட்டம் கே.புதுப்பாளையம் அருகே உள்ள வள்ளியப்பம்பட்டியை சேர்ந்தவர் ராஜேஷ்கண்ணன்(47). இவர் தனது வீட்டின் அருகில் காலியாக உள்ள கடை ஒன்றில், டாஸ்மாக் மதுபானங்களை மொத்தமாக வாங்கி பதுக்கி வைத்து கூடுதல் வ விலைக்கு விற்பனை செய்வதாக, பரமத்தி போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. இதையடுத்து உடனடியாக சம்பவ இடத்திற்கு சென்ற போலீசார், அங்கு சோதனை மேற்கொண்டனர். இதில் கடையில் ₹10 ஆயிரம் மதிப்பிலான 50 மதுபான பாட்டில்கள் பதுக்கி வைத்து விற்பனை செய்தது தெரியவந்தது. இதையடுத்து மதுபான பாட்டில்களை பறிமுதல் செய்த போலீசார், ராஜேஷ்கண்ணன்‌ கைது செய்து, விசாரணை நடத்தி வருகின்றனர். இதேபோல் பரமத்திவேலூர் அடுத்த பாண்டமங்கலம், உரம்பூர் பஸ் நிறுத்தம் அருகே மதுபானம் விற்பனை செய்த திருச்சி மாவட்டம், மணப்பாறையை சேர்ந்த கணேசன் (32) என்பவரை கைது செய்த பரமத்திவேலூர் போலீசார், அவரிடம் இருந்து ₹2 ஆயிரம் மதிப்புள்ள 10 மதுபான பாட்டில்களை பறிமுதல் செய்தனர்.

The post மகாவீர் ஜெயந்தி நாளில் மது விற்ற 39 பேர் கைது appeared first on Dinakaran.

Tags : Mahavir Jayanti ,Namakkal ,Mahavir ,Jayanti ,
× RELATED மஹாவீர் ஜெயந்தி, மே தினத்தில் டாஸ்மாக் விடுமுறை