×

காஞ்சிபுரத்தில் ரூ.2.29 கோடியில் தாமல் ஏரி மதகுகளை சீரமைக்கும் பணி: எம்பி, எம்எல்ஏ துவக்கி வைத்தனர்

காஞ்சிபுரம்: காஞ்சிபுரம் தாமல் ஏரி மதகுகளை, ரூ.2.29 கோடி மதிப்பில் சீரமைக்கும் பணியை செல்வம் எம்பி, ஏழிலரசன் எம்எல்ஏ ஆகியோர் தொடங்கி வைத்தனர். காஞ்சிபுரம் மாவட்டத்தில் பெரிய ஏரிகளில் ஒன்றான தாமல் ஏரிக்கு, பாலாறு மற்றும் கசக்கால்வாய் (பாம்பு கால்வாய்) மூலம், நீர்வரத்து வந்து கொண்டு இருக்கிறது. இந்த ஏரியின் மூலம், 8 மதகுகளுடன் சுமார் 611 ஏக்கர் பரப்பளவும், சுமார் 2,307 ஏக்கர் நிலங்கள் பாசன வசதி பெறுகின்றன. இந்த ஏரியின் மூலம் சுற்றுவட்டார பகுதிகளை சேர்ந்த விவசாயிகள் பெரிதும் பயனடைந்து வருகின்றனர். இந்நிலையில், கடந்த 2 ஆண்டுகளில் பெய்த கன மழையினால், இந்த ஏரியின் கரைகளில் உடைப்பு மற்றும் மதகுகள் சேதமடைந்தது. இதனால், தமிழ்நாடு அரசின் நீர்வளத்துறையின் பராமரிப்பில் உள்ள தாமல் ஏரியின் ஏரிக்கரைகளை சீரமைக்க வேண்டும் என்று அப்பகுதி மக்கள் கோரிக்கை வைத்தனர்.

அதன்படி, தமிழ்நாடு அரசின் சார்பில், ரூ.2.29 கோடி நிதி ஒதுக்கீடு செய்யப்படுள்ளது. தாமல் ஏரியினை அகலப்படுத்தி பலபடுத்துதல், கரையை உயர்த்துதல், மதகுகளை சீரமைத்தல், வரவு கால்வாய்களை தூர்வாருதல் உள்ளிட்ட பணியை செல்வம் எம்பி, எழிலரசன் எம்எல்ஏ ஆகியோர் நேற்று துவக்கி வைத்தனர். மேலும், பொதுப்பணித்துறை அதிகாரிகளிடம், பணிகளை மழைக்காலத்திற்கு முன்பே விரைவாக முடிக்க வேண்டும் என வலியுறுத்தினார். இந்நிகழ்வில், ஒன்றிய குழு பெருந்தலைவர் மலர்க்கொடி குமார், ஒன்றிய கவுன்சிலர் மோகனா இளஞ்செழியன், ஒன்றிய செயலாளர் குமார், தலைமை செயற்குழு உறுப்பினர் சுகுமார், ராம் பிரசாத், நீலகண்டன், சசிகுமார் பொதுப்பணித்துறை அதிகாரிகள் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

The post காஞ்சிபுரத்தில் ரூ.2.29 கோடியில் தாமல் ஏரி மதகுகளை சீரமைக்கும் பணி: எம்பி, எம்எல்ஏ துவக்கி வைத்தனர் appeared first on Dinakaran.

Tags : Kanchipuram ,MLA ,Kanchipuram Thamal lake ,Selvam ,Ehilarasan ,Dinakaran ,
× RELATED காஞ்சிபுரம் நாடாளுமன்ற தொகுதி...