×

தேர்தலில் ஏற்பட்ட முன்விரோதம்; மாணவர் சங்க தலைவர் மீது சரமாரி தாக்குதல்: முன்னாள் மாணவர்கள் உட்பட 3 பேர் கைது

சென்னை: கல்லூரி மாணவர் சங்க தேர்தலில் ஏற்பட்ட முன்விரோதம் காரணமாக மாணவர் சங்க தலைவர் மீது தாக்குதல் நடத்திய முன்னாள் மாணவர்கள் உட்பட 3 பேரை போலீசார் கைது செய்தனர். சென்னை ராயப்பேட்டை புதுக்கல்லூரியில் மாணவர் சங்க தேர்தல் தொடர்பாக முன்னாள் மாணவர்கள் சோயிப் முகமது தரப்புக்கும், தற்போது தலைவராக உள்ள முகமது நசுருல்லா தரப்புக்கும் இடையே அடிக்கடி தகராறு ஏற்பட்டு வந்துள்ளது. இதற்கிடையே தேர்தல் தொடர்பாக நேற்று முன்தினம் கல்லூரியில் மாணவர் சங்க தலைவர் முகமது நசுருல்லாவை முன்னாள் மற்றும் தற்போது கல்லூரியில் படித்து வரும் 10 மாணவர்கள் கடுமையாக தாக்கி உள்ளனர். இதை பார்த்த சக மாணவர்கள் மோதலில் ஈடுபட்ட மாணவர்களை தடுத்தனர். அதில் சில மாணவர்களை பிடித்து கல்லூரி முதல்வரிடம் மாணர்கள் ஒப்படைத்தனர்.

பின்னர் மோதல் தொடர்பாக கல்லூரி நிர்வாகம் சார்பில் ராயப்பேட்டை காவல் நிலையத்தில் புகார் அளிக்கப்பட்டது. மேலும், தாக்குதலில் காயமடைந்த மாணவர் சங்க தலைவர் முகமது நசுருல்லாவை ராயப்பேட்டை அரசு மருத்துவமனையில் அனுமதித்தனர். புகாரின் படி போலீசார் விசாரணை நடத்திய போது, தேர்தல் முன்விரோததால் இந்த மோதல் சம்பவம் நடந்தது விசாரணையில் தெரியவந்தது. அதைதொடர்ந்து போலீசார் மோதல் தொடர்பாக சிசிடிவி பதிவுகளை வைத்து முன்னாள் மாணவர்கள் உட்பட 10 மாணவர்கள் மீது வழக்கு பதிவு செய்து, முன்னாள் மாணவர்கள் சோயப் அகமது, முபாரக் செரீப் மற்றும் முதலாமாண்டு மாணவர் என 3 பேரை கைது செய்தனர். மேலும், தலைமறைவாக உள்ள 7 மாணவர்களை தேடி வருகின்றனர்.

The post தேர்தலில் ஏற்பட்ட முன்விரோதம்; மாணவர் சங்க தலைவர் மீது சரமாரி தாக்குதல்: முன்னாள் மாணவர்கள் உட்பட 3 பேர் கைது appeared first on Dinakaran.

Tags : student union ,CHENNAI ,
× RELATED மாணவர் சங்க தேர்தலில் ஜேஎன்யூ...