×

அதிக உறுப்பினர் சேர்க்கும்வார்டுக்கு தங்க காசு பரிசு

கிருஷ்ணகிரி, ஏப்.5: கிருஷ்ணகிரி நகராட்சியில் திமுகவில் அதிக உறுப்பினர்களை சேர்க்கும் வார்டுக்கு ஒரு பவுன் தங்க காசு வழங்கப்படும் என நகர செயலாளர் தெரிவித்துள்ளார். கிருஷ்ணகிரியில் நேற்று நகர திமுக சார்பில், உறுப்பினர் சேர்க்கைக்கான கூட்டம் நடந்தது. கூட்டத்திற்கு நகர செயலாளர் நவாப் தலைமை வகித்தார். இதில் கிழக்கு மாவட்ட திமுக செயலாளர் மதியழகன் எம்எல்ஏ., கலந்து கொண்டு, புதிய உறுப்பினர் சேர்க்கைக்கான விண்ணப்பங்களை வழங்கினார். கூட்டத்தில் நகர செயலாளர் நவாப் பேசுகையில், கிருஷ்ணகிரி நகராட்சியில் 33 வார்டுகளில் 54 ஆயிரம் வாக்காளர்கள் உள்ளனர். இதில், வார்டுகள் தோறும் 300 பேர் கொண்ட புதிய உறுப்பினர்களை சேர்க்க வார்டு கவுன்சிலர்கள் தலைமையில் வட்ட செயலாளர்கள், பி.எல்.ஏ-2 ஆகியோர் இணைந்து பாடுபட வேண்டும். கிருஷ்ணகிரி நகராட்சிக்குட்பட்ட பகுதிகளில் அதிகமான உறுப்பினர்களை சேர்க்கும் வார்டுக்கு முதல் பரிசாக ஒருபவுன் தங்க காசு, இரண்டாம் பரிசாக ₹15 ஆயிரம், மூன்றாம் பரிசாக ₹10 ஆயிரம் வழங்கப்படும். மேலும் நகராட்சியில் வார்டுகள் தோறும் செல்லும் கட்சி நிர்வாகிகள், வார்டு கவுன்சிலர்கள் பொதுமக்கள் குறைகளை கேட்டு உடனுக்குடன் சரி செய்ய வேண்டும் என்றார். இந்த கூட்டத்தில், மாவட்ட துணை செயலாளர் சாவித்திரி கடலரசுமூர்த்தி, மாவட்ட பொருளாளர் கதிரவன், நகர்மன்ற தலைவர் பரிதா நவாப், சந்திரசேகர், வட்ட செயலாளர்கள், வார்டு கவுன்சிலர்கள் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

அரசு மானியம் பெற ஆன்லைனில் பதிவு அவசியம்போச்சம்பள்ளி, ஏப்.5: மத்தூர் வேளாண்மை உதவி இயக்குனர் சிவநதி வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது: மத்திய, மாநில அரசுகள் விவசாயிகளின் நலனுக்காக பல்வேறு நலத்திட்டங்களை செயல்படுத்தி வருகிறது. இதன் தொடர்ச்சியாக வேளாண் அடுக்கு என்ற திட்டத்தினை செயல்படுத்தி உள்ளது. வேளாண் அடுக்கிற்கான ஆன்லைன் பதிவு என்ற வலைதளங்களில் விவசாயிகளின் விவரம் மற்றும் நில உடமை விவரங்களை பதிவிட வேண்டும். மத்திய, மாநில அரசுகள் அநேக மானிய திட்டங்களை செயல்படுத்தி வருகிறது. பேரிடர் மேலாண்மை துறை, வேளாண்மை மற்றும் உழவர் நலத்துறை, தோட்டக்கலைத்துறை, வேளாண்மை பொறியியல் துறை, வேளாண்மை விற்பனை மற்றும் வேளாண் வணிக துறை, விதை சான்றளிப்பு துறை, பட்டு வளர்ச்சி துறை, கால்நடை துறை, வருவாய் துறை, கூட்டுறவு துறை, உணவு வழங்கல் துறை, ஊரக வளர்ச்சி துறை ஆகிய 13 துறைகள் ஒருங்கிணைக்கப்பட்டு அனைத்து துறைகளிலிருந்தும் மானியங்கள் விவசாயிகளுக்கு வழங்க வழி வகை செய்கிறது. விவசாயிகள் ஆதார் எண், புகைப்படம், ஆதார் எண்ணுடன் இணைக்கப்பட்ட வங்கி கணக்கு எண், நில உடமை விவரங்களை உரிய கிராம நிர்வாக அலுவலர்களை தொடர்பு கொண்டு சரிபார்த்து கொள்ள வேண்டும். இவ்வாறு சிவநதி தெரிவித்துள்ளார்.

The post அதிக உறுப்பினர் சேர்க்கும்
வார்டுக்கு தங்க காசு பரிசு
appeared first on Dinakaran.

Tags : Krishnagiri ,DMK ,Dinakaran ,
× RELATED டிப்பர் லாரியில் கற்கள் கடத்திய டிரைவர் கைது