×

பாபர் மசூதி இடத்தை முஸ்லிம்களிடம் திருப்பி வழங்க கோரி நாகையில் எஸ்டிபிஐ கட்சியினர் ஆர்ப்பாட்டம்


நாகை,டிச.7: பாபர் மசூதி இடத்தை முஸ்லிம்களிடம் திருப்பி கொடுக்க வலியுறுத்தி எஸ்டிபிஐ கட்சி சார்பில் நாகையில் ஆர்ப்பாட்டம் நடந்தது. ஆர்ப்பாட்டத்திற்கு பைசல்ரகுமான் தலைமை வகித்தார். மாவட்ட செயலாளர் அபுகாசிம் வரவேற்றார். கேம்பஸ் பிரண்ட் ஆப் இந்தியா மாவட்ட தலைவர் நிதால், பாப்புலர் பிரண்ட் ஆப் இந்தியா மாவட்ட தலைவர் முகம்மது ரபீக், விமன் இந்தியா மூமன்ட் மாவட்ட தலைவி சீராகனி, மாவட்ட பொது செயலாளர் ஜுலைகா, மாவட்ட தலைவர் சாதிக் ஆகியோர் முன்னிலை வகித்தனர். பாப்புலர் பிரண்ட் ஆப் இந்தியா திருச்சி மண்டல தலைவர் அமீர்பாட்சா, நாகை மாவட்ட செயலாளர் ஷேக்அலாவுதீன், மாவட்ட பேச்சாளர் முகம்மது யாமின் ஆகியோர் பேசினர்.

கீழ்வேளூர் பகுதியில் நடந்த ஆர்ப்பாட்டத்திற்கு பாபுகான் தலைமை வகித்தார். டிசம்பர் மாதம் 6ம் தேதி பாபர் மசூதி தினத்தன்று பாபர் மசூதி நில உரிமை விவகாரத்தில், வழிபாட்டு தலங்கள் சட்டம் -1991 அமல்படுத்தி, பாபர் மசூதி இடத்தை மீண்டும் முஸ்லிம்களிடம் திருப்பி கொடுக்க வேண்டும். பாபர் மசூதி சட்டவிரோதமாக இடித்த குற்றவாளிகளுக்கு தண்டனை வழங்க வேண்டும் ஆகிய கோஷங்களை எழுப்பி ஆர்ப்பாட்டம் நடத்தினர். மயிலாடுதுறை: பாபர் மசூதி இடிப்பு தினத்தை முன்னிட்டு எஸ்டிபிஐ கட்சியின் மயிலாடுதுறை மாவட்ட தலைவர் சபீர் அகமது தலைமையில் மயிலாடுதுறை தாலுகா அலுவலகம் முன் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

ஆர்ப்பாட்டத்தில் மாவட்ட துணை தலைவர் கண்ணன், மாவட்ட செயலாளர் ஜியாவுதீன், முகம்மதுரவூப், மயிலாடுதுறை தொகுதி தலைவர் முகம்மது வாரிஸ், தொகுதி செயலாளர் அல்ரியாத், பூம்புகார் தொகுதி செயலாளர் அனஸ், சீர்காழி தொகுதி செயலாளர் சகாபுதீன், உட்பட பலர் கலந்து கொண்டனர். ஆர்ப்பாட்டத்தில் மத்திய அரசுக்கு எதிராக முழக்கமிட்டனர், கோயில் பாதுகாப்பு சட்டத்தை அமல்படுத்த வேண்டும். பாபர் மசூதி இடத்தை மீண்டும் முஸ்லிம்களுக்கு வழங்க வேண்டும். பாபர் மசூதி இடித்த குற்றவாளிகளுக்குத் தண்டனை வழங்கவேண்டும் என்று மத்திய அரசை கண்டித்து ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

Tags : protests ,STPI ,return ,Nagaland ,Babri Masjid ,Muslims ,
× RELATED பண பலத்தை நம்பி தேர்தலில் நிற்கும் பாஜ: -எஸ்டிபிஐ தலைவர்